பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264


தேவாசிறியோம் பிழையைப் போறுப்பாய் பெரியோனே
ஆவா என்றங் கடியார்தங்கட் கருள் செய்வாய்
ஒவா வுவரி கொள்ள வுயர்ந்தா யென்றேத்தி
மூவா முனிவர் வணங்கும் கோயில் முதுகுன்றே.

(2–64–1)

எனவும்

ஞானிகளாயுள்ளார்கள் நான்மறையை
     முழுதுணர்ந்தைம் புலன்கள் செற்று
மோனிகளாய் முனிச்செல்வர் தனித்திருந்து
     தவம் புரியும் முதுகுன்றமே.

(1–131–10)

எனவும் வரும் திருப்பாடல்களில் ஆளுடையபிள்ளையார் சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளமை இங்கு நினைத்தற் குரியதாகும்.

இங்ஙனம் முனிவர்கள் விரும்பிப் போற்றும் முழு முதற்பொருளாகிய முதுகுன்றப் பெருமான் தன்னை வழிபடும் மார்க்கண்டேயர் முதலிய முனிவர்க்கும், என்றும் இறவாத பெருவாழ்வினராய் நிலமிசை நீடு வாழ்தல் வேண்டி அவர்தம் வாழ்நாள் மேல்வரும் கூற்றின் ஆற்றலை மாற்றித் தடுக்கும் அருட்செயலை,

'முனிவர்க்கு அருங்கூற்றைக் குமைத்த நம்பி' (நம்பி என்ற திருப்பதிகம்-5)

என நம்பி ஆரூரர் குறித்துள்ளமை திருமுதுகுன்றத்தில் சாவாதவர் பிறவாதவர் தவமே மிகவுடையார் மூவாத பன் முனிவர்கள் வாழ்ந்த செய்தியினை வலியுறுத்தல் காணலாம்.