பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

277


எனவரும் திருமூலர் வாய்மொழி உடம்பினை அழியாது காக்க வேண்டியதன் இன்றியமையாமையைப் புலப்படுத்துவதாகும்.

எனவே சன்மார்க்க நெறியில் நின்றோர் கற்கத்தக்க கல்வி 'சாகாக்கலை' என்பது நன்கு பெறப்படும், உடம்பு நெடுங்காலம் நிலை பெறுதற்கு ஐம்புலனடக்கம் இன்றியமையாததாகும்.

சாகாக்கல்வியை விரும்பும் சன்மார்க்கருக்கு எல்லா உயிர்களிடத்தும் எப்பொருள்களிலும் கலந்து விளங்குவது சிவபரம் பொருள் ஒன்றேயென எங்கும் சிவமாகக்காணும் ஒருமையுணர்வு மிகவும் இன்றியமையாததாகும். ஐம்புலன்களையும் அடக்கியாளும் உரன் என்னும் திண்மை வேண்டும். பிறர் இட்ட பணியைச் செய்யும் அடிமையுணர்வின் நீங்கிச் சீவசுதந்தர முடையராய்த் தம் உழைப்பால் வரும் தூய உணவே அவர் உண்ணத்தக்க பொருந்திய உணவாகும். இவ்வுண்மையினை அறிவுறுத்துவது,

ஒன்றாகக் காண்பதே காட்சி; புலனைந்தும்
வென்றான்தன் வீரமே வீரம் - என்றானும்
சாவாமற் கற்பதே கல்வி; தனைப்பிறர்
ஏவாமல் உண்பதே ஊண்

(ஒளவையார்-தனிப்பாடல்)

எனவரும் ஒளவையார் பாடலாகும்.

வள்ளலார் அறிவுறுத்திய சன்மார்க்க நெறியிலும் ஒளவையார் பாடலில் கண்டவாறு நால்வகைக் கருத்துகள் இடம் பெற்றுள்ளன. அவையாவன (1) சாகாக் கல்வி (2) ஒன்றே சிவம் என அறியும் அறிவு, (3) ஐந்து மலங்களையும் வென்றவர்களது வல்லபம்,