பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

291

சத்தியம் என என்தனக்கு அருள்புரிந்த
     தனிப் பெருங்கருணை என் புகல்வேன்
முத்தியற் சிவிகை இவர் ந்தருள் நெறியில்
     முதலர சியற்றிய துரையே!

(3231)

எனவரும் திருவருட்பாவாகும்.

மேற்குறித்த வண்ணம் திருஞானசம்பந்தப் பெருமான் குருவாய்த் தோன்றி வள்ளலாருக்கு அறிவுறுத் தருளிய உயிரனுபவம், அருளனுபவம், சிவ அனுபவம், ஆகிய மூவகை அனுபவங்களும் ஒருங்கே பெற்ற செம்புலச் செல்வர் மாணிக்கவாசகர் என்பதனை வள்ளலார் உள்ளவாறு உணரப் பெற்றார். வான் கலந்த மாணிக்கவாசகர் பெற்ற பேரின்ப நிலையினையே தமக்குரிய சித்தி நிலையாகப் பெறுதல்வேண்டும் என விரும்பியவர் வடலூர் வள்ளலார். இம்மூவகை அநுபவங்களையும் வழங்கும் திருவருளிலக்கியமாகிய திருவாசகத்தை இடைவிடாது ஒதி நெஞ்சம் நெக்குருகினார். திருவாதவூரடிகள் திருவாய் மலர்ந்தருளிய திருவண்டப் பகுதித் திருவகவலைப் பல முறையும் ஒதி அதன் பொருளை மணிவாசகராகிய குருவருளால் நன்குணரப்பெற்றார். அதன் பயனாக வள்ளலார் உள்ளத்தே தோன்றி வளர்ந்த திருவருட் கல்வியே மரணமிலாப் பெருவாழ்வை நல்கும் சாகாக்கலை எனக்கருத வேண்டியுள்ளது.

எல்லாம் வல்ல இறைவன் உலகப் பெரும் பரப்பின் திரட்சிகளாகிய அண்டங்களெல்லாம் இல்நுழை கதிராகிய வெயில் ஒளியில் விளங்கித் தோன்றும் நுண்ணிய அணுக்களைப் போன்று மிகச் சிறியனவாகத் தோன்றத்தான் அவற்றினும் மிக மிகப்பெரும் பொருளாகி, எல்லா அண்டங்களுக்கும் அப்பாற்பட்டு விளங்குதலாகிய பருமை நிலையினையும், உயிர்க்குயிராய் உள் நின்று