பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

292

 எவ்வகைப் பொருள்களையும் ஊடுருவி இயக்கி அருளும் நுண்மை நிலையினையும் ஒருங்குடையவன். மேற்குறித்த இறை இயல்பினை அவன் திருவருளாலே உணரப்பெற்ற மணிவாசகப் பெருமான் அம்முதல்வனது பருமையும், நுண்மையுமாகிய நிலையினையும் வியந்து போற்றுவதாக அமைந்தது, 'திருவண்டப்பகுதி” என்னும்திருஅகவலாகும். இது "அண்டப்பகுதியின் உண்டைப்பிறக்கம்” எனத் தொடங்கி அண்டங்களின் உள்ளும், புறமும் திகழும் இறைவனது பேராற்றலை விரித்துக் கூறுவதாதலின் 'திருவண்டப்பகுதி” என வழங்கப் பெறுவதாயிற்று. இறைவன் செய்தருளும் ஐந்தொழில்களில் படைத்தல், காத்தல், அழித்தல் மறைத்தல் என்னும் நான்கினைப் பற்றிப் பொதுவாகவும், இறைவன் தன் பால் அன்புடைய அடியார்கட்கு அருளுதலாகிய பேரின்ப நிலையினைக் குறித்துச் சிறப்பாகவும் தெரிந்து கொள்ளுதற்கேற்ற அரும் பொருள்கள் இதன்கண் விரித்துரைக்கப் பெற்றுள்ளன. சொற்பதங் கடந்த தொல்லோனான இறைவன், தம் பொருட்டுக் குருவாக எழுந்தருளி, அழியும் நிலைமைத்தாகிய ஊன் உடம்பை ஒழியச் செய்து அன்பினால் கசிந்து அருள் ஊற்றெடுக்கும் நிலைத்த யாக்கையினைத் தந்தருளிய திறத்தையும், மறையோர் கோலம் காட்டியருளிய குருவின் அருளுபதேசத்தால் தாம் அன்புமீதூரப் பெற்ற திறத்தையும், அந்நிலையில் இறைவன் அருளால் பெற்ற பேரின்பம், தாம் உடம்போடிருந்து பொறுத்தற் கியலாதபடி தமது அங்கங்களையெல்லாம் கொம்புத்தேன் கொண்டு உருவாக்கினன் என்று சொல்லுமாறு முழுவதும் தம்மைத் தன்னகத்தே அகத்தில் அடக்கிக் கொண்டருளிய திறத்தினையும், உருகும் இயல்பினதாகிய உள்ளத்தைக் கொண்டு ஓர் உருவத்தைச் செய்தார் போன்று இன்பம் ஊற்றெடுத்துப் பாயும் உடம்பினைத் தமக்கு அருளிய இறைவன் கற்கண்டினை