பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

334


வாழ்ந்தவர், அருட்பிரகாச வள்ளலார் என்பதனை நன்குணரப் பெறுவர் என்பது திண்ணம்.

நான்காவது உரைநடை விண்ணப்பமாக அமைந்தது, 'சமரச சுத்த சன்மார்க்க சங்கச் சத்திய விண்ணப்பம். இது, வள்ளலார் வகுத்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் உறுப்பினராகிய அன்பர்கள் அனைவரும் வடலூர்ப் பெருவெளியில் உள்ள சுத்த சிவானுபவ ஞான சபையில் ஒருங்கு கூடி அருட்பெருஞ்சோதி ஆண்டவரை முன்னிலைப்படுத்தி வேண்டும் சிறப்புடைய விண்ணப்ப மாகும். இவ்விண்ணப்பத்தில் மக்கள் அடைதற்குரிய தேக சுதந்தரம், போக சுதந்தரம், ஜீவசுதந்தரம் என்னும் மூவகைச் சுதந்தரங்களும், நீங்கிய இடத்தேதான் இவற்றிற்கு மேலாகிய திருவருட் சுதந்தரம் நமக்குக் கிடைக்கும் என்ற உண்மை நன்கு வலியுறுத்தப் பெற்றுள்ளமை காணலாம்.

அருட்பிரகாச வள்ளலார், தம்பால் அன்புடைய மாணவர்கட்கும், பெருமக்கட்கும், அறிஞர்கட்கும், தம் திருக்கரத்தால் வரைந்த கடிதங்களாகிய திருமுகங்கள் அடிகளாரது தெளிந்த தமிழ் உரைநடைத் திறத்தினையும், தம்பால் அன்புடையவர்களது நல்வாழ்க்கையில் அடி களார் கொண்டிருந்த ஈடுபாட்டினையும், தம் அன்பர்கள் வறுமையாலும் பிணியாலும் துன்புற்ற நிலையில் அத்துன்பங்களைக் களையும் திறத்தில் இரக்கவுணர் வுடைய வள்ளலார் மேற்கொண்ட இறையருள் வழிப்பட்ட முயற்சியினையும் நன்கு புலப்படுத்தும் நிலையில் அமைந்துள்ளமை காணலாம். இத்திருமுகங்களை ஊன்றி நோக்குவோர் இறைவன் திருவருள்வழி அன்றி எதனையும் செய்ய முற்படாத வள்ளலாரின் உள்ளப் பாங்கினையும், தம்பால் அன்புடையோருடைய வேண்டு கோளையும் மறுக்காது உடன்படும் நிலையில் வள்ளலாருக்