பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

335

 கிருந்த கண்ணோட்டத்தினையும் தெளிவாக உணரப் பெறுவார்கள்.

இராமலிங்க வள்ளலார், தமது குறிக்கோளாகிய சீவகாருண்ய ஒழுக்கத்தினை மக்களிடையே பரப்புதல் வேண்டிச் சமரசவேத தர்மசாலை தொடங்கும் பொழுது, சாலைத் தொடக்க விழா அழைப்பாகவும், சாலை விளம்பரமாகவும், சாலை அன்பர்களுக்கு இட்ட கட்டளைகளாகவும், ஞானசபை விளம்பரமாகவும், சபையில் உள்ளார்க்கு இட்ட ஒழுக்கக் கட்டளையாகவும், சன் மார்க்கப் பிரார்த்தனையாகவும், சபை வழிபாட்டு விதி யாகவும், சித்திவளாக அமைப்பும் அதுபற்றிய வழிபாட்டு விதியாகவும் உரைநடையில் பல்வேறு விண்ணப்பங்களை எழுதி வெளியிட்டுள்ளார்கள்.

சன்மார்க்க சங்கக் கொள்கைகளைப் பரப்புதற் பொருட்டு 'சன்மார்க்க விவேக விருத்தி' என்னும் பத்திரிகை ஒன்றினையும் தொடங்கியுள்ளார்கள்.

இளைஞர்முதல் முதியோர்வரை யாவர்க்கும் சன் மார்க்க நெறியைப் போதிக்கும் நிலையில் 'சன்மார்க்க போதினி' என்கிற சாத்திரப் பாடசாலை ஒன்றினையும் தொடங்கி நடத்த எண்ணி இருந்தார்கள்.

இவ்வாறு மாணாக்கர் பலருக்கும் உயர்ந்த நூல்களைப் பாடஞ் சொல்லியும், ஒழிவிலொடுக்கம், சின்மய தீபிகை போன்ற தத்துவ நூல்களை விளக்கக் குறிப்புடன் சிறந்த முறையில் பதிப்பித்தும், சீவகாருண்ய ஒழுக்கம் பற்றியும் சன்மார்க்க நெறி பற்றியும் பொதுமக்கள் நன்குணர்ந்துகொள்ளும் முறையில் பத்திரிகை தொடங்கியும், தம்மை அடைந்தோர்களின் ஐயங்களைப் போக்கி மெய்யுணர்வளித்தும் இவ்வாறு நூலாசிரிய