பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

345


ஐந்துறலாம் ஆவி யீரைந் தறலாம் ஆவியீர்
ஐந்திடலாம் ஓரிரண்டோ டாய்ந்து

(2578)

எனவரும் திருவருட்பாவாகும். இதன் கண் ஆவியீரைந்து என்றது, ஆன்ம எழுத்தாகிய 'ய' என்னும் தமிழ் எண்ணின் குறியீடாயுள்ள யகரத்தை, 'ஐ' என்றது, இறைவனைக் குறிக்கும் எழுத்தாகிய 'சி' கரத்தை. அபரத்தே வைத்தோதின் - முற்குறித்த 'ய' கரத்தை, 'சி' கரத்தின் பின்னே வைத்தோதினால்; அபரம் = பின். திருவைந்தெழுத்தினை ஒதுங்கால் இறை எழுத்தாகிய, சிகரத்தின் பின் ஆன்ம எழுத்தாகிய 'ய' கரத்தை, ஒதும் முறையில் ஒதவேண்டும் என வற்புறுத்தும் நிலையில் ஆவி ஈர் ஐந்தை 'அபரத்தே வைத்தோதின்' என்றார் இரண்டாம் அடியில் ஆவியீரைந்தென்றது, 'ஆ' கார எழுத்தின் பின்னும், 'வி' என்ற எழுத்தின் பின்னும் இயைந்த பத்தினை; ஆவின் பின் இயைந்த பத்து ஆபத்து; 'வி'யின் பின் இயைந்த பத்து விபத்து; சூக்கும ஐந்தெழுத்தினை முறைப்படி ஒதினால் உலகில் நேரும் ஆபத்தையும் விபத்தையும் அகற்றலாம் என அறிவுறுத்துவது ஆவியீரைந்தை யகற்றலாம் என்ற தொடராகும். ஆபத்து-அச்சத்தை விளைவிக்கும் பொருள்களால் நேரும் துன்பம். விபத்து-எதிர்பாராத வகையில் இயற்கை மாற்றங்களால் நேரும் துன்பம். ஆவி ஈரைந்து உறலாம் = ஆன்மாவுக்கு உறுதியாகிய பத்து (பத்தியினைப்) பெறலாம். இங்குப் பத்து என்னுஞ் சொல் பத்தி என்ற பொருளில் வழங்கப் பெற்றது. பத்தென்னும் சொல் பத்தியைக் குறித்து வழங்குதல், 'பத்திலனேனும் பணிந்திலனேனும்' (திருவாசகம் 602) எனவும், பத்துடையீர் ஈசன் பழவடியிர் (திருவா. 157) எனவும் வரும் திருவாதவூரடிகள் வாய்மொழிகளால் அறியப்படும்.