பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

381


என்பதனை இந்நாட்டு மக்கள் அனைவரும் நன்குணர்வர். தமது பாட்டின் திறத்தாலே நாட்டின் விடுதலையுணர் வைத் தோற்றுவித்த பெருங் கவிஞர் சுப்பிரமணிய பாரதியாருக்கு வழிகாட்டியாக வாழ்ந்த தவச் செல்வர்களில் போற்றுதற்குரிய இராமலிங்க வள்ளலார் முதல் வரிசையில் வைத்து எண்ணத்தகும் தனிச்சிறப் புடையவராகத் திகழ்கின்றார். இவ்வுண்மை, "இந்துஸ்தானத்திற்குள் தமிழ் நாடு முதலாவதாகக் கண் விழித்தது. இராமலிங்க சுவாமிகள் போன்ற மகான்கள் தமிழ் நாட்டின் புதிய விழிப்பிற்கு ஆதிகர்த்தர்களாக விளங்கினார்கள்" எனவரும் பாரதியார் வாய்மொழியால் நன்கு புலனாகும்.

நம் நாட்டு மக்கள் அயலார் ஆட்சியுள்பட்டு வருந்திய துன்பம் நிலையினைக் கண்டு நெஞ்சம் நெக்குருகிய அருட் பிரகாச வள்ளலார், அருளில்லாத அயலவரது ஆட்சி அடியோடு அகற்றப் பெறுதல் வேண்டும் எனவும், உயிர்க்குயிராகிய இறைவனது திருவருளில் திளைத்த சன்மார்க்கச் செல்வர்களே இந்த நாட்டினை ஆளுதல் வேண்டுமெனவும் இடைவிடாது எண்ணியவர் ஆவர். இவ்வுண்மை,

கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக
அருள் நயந்த நன் மார்க்கர் ஆள்க -தெருள் நயந்த
நல்லோர் நினைத்த நலம் பெறுக நன்று நினைத்
தெல்லோரும் வாழ்க இசைந்து

(5618)

என வரும் திருவருட்பாப் பாடலால் இனிது விளங்கும். இந்நாட்டிற் கல்வி, செல்வம், முதலியவற்றால் ஒத்தார், உயர்ந்தார், தாழ்ந்தார் ஆகிய எல்லா மக்களும் தம்முள் வேறுபாடின்றி ஒத்த உரிமையுடையராகி நம்நாட்டின்