பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

401

கரு நெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்
     கண்மையினாற் கருத்தொருமித் துண்மை யுரைத்தேனே

(5587)

எனவும்,

சேர்ந்திடவே ஒருப்படுமின் சமரச சன்மார்க்கத்
     திருநெறியே பெருநெறியாம் சித்தியெலாம் பெறலாம்
ஓர்ந்திடுமின் உண்ணுதற்கும் உறங்குதற்கு முணர்ந்தீர்
     உலகமெலாங் கண்டிடுமோர் உளவையறிந்திலிரே
வார்ந்தகடல் உலகறிய மரணமுண்டே அந்தோ
     மரணமென்றாற் சடமெனுமோர் திரணமும் சம்மதியா
சார்ந்திடுமம் மரணமதைத் தடுத்திடலாங் கண்டீர்
     தனித்திடு சிற்சபை நடத்தைத் தரிசனஞ் செய்வீரே.

(5596)

எனவும் வரும் திருவரும் பாக்களால் இனிது புலனாதல் காணலாம்.

மேற்கண்ட இப்பாடல்களிரண்டும் வள்ளலார் தோன்றுந் துணையாக இருந்து சித்திவளாகத் திரு மாளிகையில் திருக்காப்பிட்டுக் கொள்வதற்குமுன் இறுதியாகப் பாடிய இருபத்தெட்டுப் பாடல்களில் அடங்கியன என்பதை அருட்பா அன்பர்கள் அனைவரும் நன்குணர்வர். "பெருநெறிய ... பெம்மான்" என ஞானசம்பந்தர் நுண் பொருளாய்க் குறித்த பெருநெறியினையே வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்கமாக விரித்துக் கூறியுள்ளார் என்பது இத் திருப்பாடல்களால் இனிது விளங்கும்.

திருமூலர் அருளிய "திருநெறி", "பெருநெறி" எனக் குறிக்கப்படுவது குருமுகமாக அறிவுறுத்தப்படும் சன் மார்க்கச் சிவநெறியே என்னும் உண்மையினை,