பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23


மாற்றம் மனங்கடந்து நின்ற இறைவன் தனது பேரின்பநிலையாகிய ஆனந்த வீட்டின் எல்லையை நிலைபெற்ற ஆன்மாக்கள் வந்து பொருந்தும்படி உதவிசெய்யும் அருளாகிய பராசத்தியுடனே பேதமின்றி ஒன்றி நிற்பான் என்னும் இவ்வுண்மையினை,

'தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத் தருஞ்சத்தி
பின்னமிலான் எங்கள் பிரான்'

எனவரும் திருவருட்பயனில் உமாபதி சிவாசாரியார் விளக்கியுள்ளார். இங்ஙனம் மன்னுயிர்கள் பிறவிப் பிணிப்பினின்றும் நீங்கி இறைவனது பேரின்ப வாழ்வைத் தலைப் படுதற்குத் துணைநின்று உதவிபுரிவது இறைவனது திருவருட்சத்தியே என்பதும், அவ்வருட் சத்தி முழுமுதற் பொருளினின்றும் பிரித்துணரவொண்ணாதது என்பதும், அருளாகிய தாயின் உதவி பெற்றே தந்தையாகிய சிவ பரம்பொருளை அடைந்து இன்புறுதல் இயலும் என்பதும் ஆகியவுண்மைகளை மேற்காட்டிய திருவருட்பாவில்

'உருவிளங்க உயிர் விளங்க உணர்ச்சியது விளங்க
உலகமெலாம் விளங்க அருளுதவு பெருந்தாயாம்
மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொரு பால் விளங்க
வயங்கு மணிப்பொது விளங்க வளர்ந்த சிவக் கொழுந்தே'

எனவரும் தொடர்களில் இராமலிங்க வள்ளலார் இனிது விளக்கியுள்ளமை காணலாம்,

'எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் உள்ளகத்தும் புறத்தும்