பக்கம்:திருவருட்பாவில் பெரும்பொருட் குவியல்-திருமணவிழா மலர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

20

அகோரம், ஞானவிளக்கத்துக்கு உரியது :

வாமம், விந்துவின் விருத்தியாகியாகிய விஞ்ஞானாதிகளைத் தோற்றுவித்தற்குரியது.

சத்தியோசாதம், சூக்கும தூல சரீரங்களைத் தம்முடைய இச்சையால் மந்திரங்களை அதிட்டித்து உண்டாக்குவது.

இவ்வைந்து மந்திர சக்திகளுடன், ஹாரிணி, ஜனனி, ரோதயித்ரி என்னும் மூன்று சக்திகளும் பரிக்கிரக சக்திகள்: ஆகச் சக்திகள் எட்டு (சிவஞான சித்தியார், சுபக்கம், முதல் சூத்திரம், செ. 59, சிவாக்கிர யோகிகள் உரை).

ஆன்மாக்கள்

ஆன்மாக்கள், சகலர் பிரளயாகலர் விஞ்ஞான கலர் என மூவகையினர் (வரி 58)

சகலர் ஆவார், மலம் கன்மம் மாயை என்ற மும் மலம் உடையர்.

பிரளயாகலர், மலம் கன்மம் என்ற இருமலமுடையர்.

விஞ்ஞானகலர், மலம் ஒன்றே உடையர்.

விஞ்ஞானகலர்க்குத் தன்மையிலும், பிரளயா கலர்க்கு முன்னிலையிலும், சகலர்க்குப் படர்க்கையிலும் இறைவன் உதவுவன்.

உயிர்கள் உணர்வுடைய சித்துப் பொருள்களாயினும் உணர்த்தினாலன்றித் தாமே முற்ற உணரும் இயல்பு உடையன வல்ல. ஆகவே முற்றுணர்வுடையவனாகிய இறைவன், உயிர் நின்ற உடம்புகளில் தானும் உடனாய் இருந்து உணர்த்துவதும் உணர்வதும் செய்து உதவுகிறான். எனவே காணும் உதவி காட்டும் உதவி என இறைவன் உதவி இரண்டாகும். இங்ஙனம் உதவி புரியும் இறைவன் உயிர் நின்ற உடம்பின் இதயத்திருந்து உதவி புரிகிறான். இவற்றையெல்லாம் தொகுத்து வள்ளலார்,

சகலர் விஞ்ஞானகலர் பிரளயாகலர்

இதயசாட்சியாகிய பூம்பதம்’ (வரி 58) என்றருளினார்.

மூவகையுயிர்களுக்கும் அருளும் முறைமையை, அருள் நந்தி சிவாசாரியர், போற்றிப் பஃறொடை, கண்ணி 60 - 62இல்,