பக்கம்:திருவருட்பாவில் பெரும்பொருட் குவியல்-திருமணவிழா மலர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

2

24

9. சைவ சமய குரவர் நால்வர்

திருஞான சம்பந்தர் எம்பந்த மறவெமது சம்பந்த வள்ளல்.’ (வரி 98) என்று குறிக்கப்பட்டுள்ளார். 'எம்பந்த வல்வினை நோய் தீர்த்தருளும் சம்பந்தர் காழியர் கோன்' என்று நம்பி யாண்டார் நம்பிகள் பாடுவர். சம்பந்தர் பாடல்களில் இயல் மணம் கமழும் என்பர் வள்ளலார்.

திருநாவுக்கரசர், "ஈவரசர்" என்றும், எம்முடைய நாவரசர்' என்றும் குறிக்கப்பட்டார் (வரி 99). இவரதியற் பெயர் மருணீக்கியார் என்பதாம். இவர் திருவாமூரில் வதிந்தபொழுது,

காவளர்த்தும் குளங்தொட்டும் கடப்பாடு வழுவாமல்

மேவினர்க்கு வேண்டுவன மகிழ்ந்தளித்தும் விருந்தளித்தும்

நாவலர்க்கு வளம்பெருக நல்கியும்நா னிலத்துள்ளோர்

யாவருக்கும் தவிராத ஈகைவினைத் துறைகின்றார்'

என்று திருநாவுக்கரசர் புராணத்தில் (செ. 36), சேக்கிழார் இவரது ஈகைத்தன்மையைப் பாடியுள்ளார். ஆகையால் வள்ளலார் இவரை ஈவரசர் என்று சிறப்பித்தார்.

சமணசமயத்தைத் துறந்து சைவஞ் சார்ந்து திருவதிகை வீரட்டானத்திறைவனைக் "கூற்றாயினவாறு விலக்ககிலீர்" என்ற "பதிகத்தொடை பாடிய பான்மையினால் நாவுக்கரசென்று உலகேழினும் நின் நாமம் நயப்புற மன்னுக" (செ. 74) என்று, இறைவன் அருள் செய்தமையின் இவர் நாவரசர் ஆயினார்.

திருநாவுக்கரசருக்குத் திருநல்லூரில் அவர் விரும்பிய வண்ணம் திருவடி சூட்டப்பெற்ற அருட் செயலை,

'எல்லூரு மணிமாட நல்லூரில் அப்பர்முடி யிடைவைகி யருள் மென்பதம்'

என்று வள்ளலார் பாடுவர் (வரி 102). இதில் அப்பர் என்றது திருநாவுக்கரசரை.

மேலும் திருநாவுக்கரசர் திருப்பைஞ்ஞீலிக்குச் செல்லுங்கால், "நீர் வேட்கையொடு அழிவாம் பசிவந்தணைந்திட" இறைவன், இடைவழியில் காவும் குளமும் அமைத்துப் பொதி சோறு கொணர்ந்து கொடுத்து, உண்பித்தபின் எங்கே செல்வது என்று கேட்டு, அவருடன் திருப்பைஞ்ஞீலிக்குச் சென்று பைஞ்ஞீலி அடைந்ததும் மறைந்தருளிய செய்தியை,

"இளைப்புற லறிந்தன்பர் பொதிசோ றருந்தமுன்

இருந்து பின் நடக்கும் பதம்"

என்று வள்ளலார் குறித்தருளினார் (வரி 106).