பக்கம்:திருவருட்பா-11.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலை # 09

நட்சத்திரங்கள் சூழச் சந்திரன் விளங்குவதுபோலப் பல அன்பர்கள் சூழச் சிறப்புடைய அன்பர் விளங்குவர் என்ப தாம். நம் ஐயா, ஈண்டுக் குறிப்பிட வந்த கருத்து யார் இறைவியின் அடியார்களின் திருவடிக் காட்சியைப் பெற்ற வர்களோ, அவர்கள் விண் னு:லகில் பலர் தம்மைச் சூழச் சிறப்புடன் விளங்குவர் என்பதாம். இந்தக் கருத்தை ஊன்றிக் கவனிக்கும்போது,

அன்பர் பணி செய்ய என ஆளாக்கி விட்டுவிட்டால்

இன் பதிலே தானே வந்து எய்தும் பராபரமே ’ எனும் தாயுமான வர் வாக்கு நினேவுக்கு வருகிறது. (48)

அடியார் தொழும்தின் அடிப்பொடி தான்சற் றணியப்பெற்ற முடியால் அடிக்குப் பெருமைபெற் ருர் அம் முகுந்தன்சந்தக் கடியார் மலர்அயன் முன்னுேர்தென் ஒற்றிக் கடவுள்செம்பால் வடியாக் கருணைக் கடலே வடிவுடை மாணிக்கமே.

(யொ - ரை.) அழகிய திருஒற்றியூர்க் கடவுளாகய தியாகப் பெருமானின் சரி பாதியாக அவனது இடப்பக்கத்தே விளங்கும் குறையாத கருனையுடைய கடலே வடிவுடை மாணிக்கமே! அடியவர்கள் வணங்குகின்ற உன் திருவடியின் சிறுதுளசினைத் தம் முடியில் பெற்ற காரணத்தால்தான் திருமால் அழகிய மணம் நிறைந்த தாமரை மலரில் இருக்கும் பிரமன் முதலானுேர் தங்கள் பாதங்களில் பலர் வந்து வணங்கும் பெருமை பெற்றார்கள் (எ . து.)

(அ சொ.) முகுந்தன் - திருமால். சந்தம் - அழகு. கடி - வாசனை. ஆர் - நிறைந்த மலர் - தாமரை மலர். அயன் - பிரமன். முன்னுேர் - முன்ஞேர்கள். தென் . அழகிய செம்பால் - சரிபாதியான பகுதி, வடியா -

துறையா.

(இ - கு.) கடி, உரிச்சொல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/119&oldid=681602" இலிருந்து மீள்விக்கப்பட்டது