பக்கம்:திருவருட்பா-11.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 6 திருவருட்பா

பூர்வபாகம் என்றும், ஞானகாண்டத்தை உத்தரபாகம் என்றும் கூறுவர். பூர்வ பாகத்தில் பலவகைத் தெய்வங்களேப் பற்றிய குறிப்புகளும், அத்தெய்வங்களைப் பற்றிய தேசத்திரங் களும், வழிபடும் முறைகளும், வரலாறுகளும் காணப்படும். மேலும் இதில் யாகத்தைப் பற்றியும் கூறப்பட்டிருக்கும். இந்த யாகத்தின் மூலமே தேவர்களுக்கு ஆகுதி கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கும். மேலும், இந்தக் கர்ம காண்டத்தின் வழி தெய்வ உணர்ச்சியையும், சுவர்க்கம், நரகம், மறுபிறப்பு, ஆகிய உண்டு என்னும் விளக்கங்களையும் அறியலாம்.

உத்தர பாகமாகிய ஞான காண்டத்தில், தத்துவ ஆராய்ச்சி காணப்படும். கர்டி காண்டத்தில் குறிப்பிடப் பட்ட தெய்வங்கள் சுதந்தரமுடையன அல்ல, அவைகளைச் செயல்படுத்துகின்ற பரம்பொருள் ஒன்று உண்டு. அப்பரம் பொருளே உணர்தலே ஞானம், இந்த ஞானத்தைப் பெற்றால் அன்றிப் பிறவி நீங்காது, ஞானத்தால் பரம் பொருளை உணர்ந்து அதனுேடு ஒன்று படுதலே பிறப்பு நீங்கி வீடு பெறுவதற்கு வழி ‘ என்பன போன்ற கருத்துகளே அதில் காணலாம். இந்த இருபகுதிகள் நாளடைவில் முறையே வேதம் என்றும், வேதாந்தம் என்றும் குறிக்கப்பட்டு வரு கின்றன. இன்னும் இவற்றை விரிக்கில் அவை நீளும் எனக் கருதி இத்துடன் நிறுத்தப்பட்டன. இன்னேரன்ன அரிய பெரிய நுண் கருத்துகள் வேதத்தில் இருத்தலினுல்தான் : இட்டு ஆர் மறை” என்றும் ஐயா, குறிப்பிட்டுள்ளனர்.

உபநிடதங்கள் என்பன வேதக்கருத்தை அறிவிக்க உண்டாயின. இவ்வுபநிடதங்கள் முடிந்த முடிபாக எதையும் உணர்த்தவில்லை. இவை கேவலாத்துவிதம், சுத்தாத்து விதம், விசிட்டாத்துவிதம், கவிதா எனும் பற்பல பிணக்கு களுக்கும், இடம் தருவன. இந்த உபநிடதங்கள் சைவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/126&oldid=681610" இலிருந்து மீள்விக்கப்பட்டது