பக்கம்:திருவருட்பா-11.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H i 8 திருவருட்பா

(அ - சொ.) எளியார் - தாழ்ந்தவர், ஏழைகள். மெய் - உடல், பரிமளியா - மணம் வீசிக்கொண்டு. மருவே - மணமுடைய தேவி. வெளி - பரவெளி. வெளிக்குள் வெறு வெளி - பர வெளியில் அதி சூக்குமமாய் விளங்கும் சித் வெளி. சிவம் - மங்களம். :ரை பரமேசுவரி, மேலானவள்.

(இ - கு.) மரு, பண்பாகு பெயர். பரையே என்று விளிக்கப்பட வேண்டியவள் பரை என விளிக்கப்பட்டது, அண்மை விளியரம்,

(வி - ரை.) இறைவனுக்குரிய அரிய திருப்பெயர்களுள் அடியார்க்கு எளியன் என்பதும் ஒன்று. இந்தப் பெயரை இறைவன் தானே வைத்துக் கொண்டனன். இதனை ஒரு வரலாற்றால் உணரலாம். பெத்தான் சாம்பான் என் பவன் ஒர் ஆதித் திராவிடன். அவன் சிவபெருமானே மதிலுக்கு வெளியே நின்று வணங்குபவன். அடியார்களிடத் தில் பேரன்பு கொண்டவன். அவன் சிவபெருமானுக்கு நிவேதம் அமைத்ததற்குத் தினமும் விறகு கொடுக்கும் தொண்டில் ஈடுபட்டான். அவனது அன்பின் பெருக்கை உணர்ந்த தில்லைக் கூத்தன் ஒர் அந்தண வடிவில் தோன்றி அவனே நோக்கி இனி இவ்விறகிஇனக் கொற்றவன் குடி உமாபதி சிவாசாரியார் திருமடத்துக்கு அளித்து வருக’ என்று கட்டளே இட்டனன். இக்கட்டளேப்படியே உமாபதி சிவா சாரியார் திருமடத்திற்கு விறகினக் கொடுத்து வந்தான். இறைவர் பெத்தான் சாம்பானுக்குச் சிவ தீட்சை செய்து முத்திக்கு ஏதுவாகும்படி செய்யத் திருவுளம் கொண்டு, பரடிவைதிகர்களாகிய தில்லைவாழ் அந்தணர் மரபினராம் உமாபதி சிவாசாரியார்க்கு ஒரு கடிதம் எழுதி அதனைப் பெத்தான் சாம்பானிடமே கொடுத்து உமாபதி சிவாசாரிய சிடம் கொடுக்கப் பணித்தார். அக்கடிதத்தில்தான் இறைவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/128&oldid=681612" இலிருந்து மீள்விக்கப்பட்டது