பக்கம்:திருவருட்பா-11.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலே 1 & 5

கூறுதல் காண்க. இந்த நிலை தமக்கு வந்திலதே என்னும் கருத்தில்,

‘ஆடு கின்றிலே கூத்துடை யான் கழற்கு அன்பிலே என்புருகிப் பாடு கின்றிலை பதைப்பதும் செய்கிலே பணிகில பாதமலர் சூடு கின்றிலை சூட்டுகின் றதும் இலே துணையிலி பிணநெஞ்சே தேடு கின்றிலே தெருவுதோ றலறிலே செய்வதொன்

றறியேனே”

என்று தம் மன்த்திற்கு அறிவுறுத்தல் காண்க. எனவேதான் ‘தொழுதாடும் அன்பர்’ என்றனர். உலகமுறைக் கேற்ப இறைவி, இறைவனுக்கு மனேவி என்னும் முறையில் விளங் கலின், துணையே’ எனப்பட்டாள். துனேயே என்பதன் பொருள் வாழ்க்கைத் துனேவி என்பது. (52)

தெருட்பால் உறுங்ஐங்கைச் செல்வர்க்கும் நல்இளர் சேய்க்கும்.மகிழ்ந்

தருட்பால் அளிக்கும் தனத்தன மேளம் அகம் கலந்த இருட்பால் அகற்றும் இருஞ்சுட ரேஒற்றி எந்தைஉள்ளம் மருட்பால் பயிலும் மயிலே வடிவுடை மாணிக்கமே.

(யொ ரை.) தெளிவாகிய குணம் பொருந்தப் பெற்ற ஐந்து கைகளேயுடைய விநாயகப் பெருமானுக்கும் நல் இளைய குமரனுகிய முருகப் பெருமானுக்கும் இன்பத்தோடு அருள் செல்வமாகிய பாலே அளிக்கும் கொங்கைகளைப் பெற்ற செல்வமே ! எங்கள் உள்ளத்தில் பொருந்தியுள்ள அஞ்ஞான மாகிய இருட்டை எல்லாம் நீக்குகின்ற பேர் ஒளியே திரு ஒற்றியூரில் உள்ள எங்கள் தந்தையாம் தியாகப் பெருமான் உள்ளம் களிப்பால் மயங்கும்படி அவருடன் கலந்து பழகும் மயிலே வடிவுடை மாணிக்கமே! (எ . து.)

(அ - செ.) தெருள் - தெளிவு, அறிவு. பால் குணம். உறும் - பொருந்தப் பெற்ற. ஐ . ஐந்து. ஐங்கைச் செல்வர். ஐந்து கைகளேயுடைய விநாயகப் பெருமான். இளம்சேய் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/145&oldid=681633" இலிருந்து மீள்விக்கப்பட்டது