பக்கம்:திருவருட்பா-11.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 54 திருவருட்பா

னர். நான் எல்லோரும் நினக்கின்ற உனது நல் அருளாகிய தேனே விரும்பிய புதியவனுக இருக்கின்றேன். இந்நிலயில் ே சிறிதும் என்மீது மன இரக்கம் காட்டாதிருப்பதைக் கண்டு நான் வருந்தி நின்றேன். இது நல்லதோ?” (எ . து.)

(அ- செ. மகிழ்நன் - கணவன். முன்னும் - தினக்கும். விழைந்து - விரும்பி, விருந்து - புதுமை.

இ கு. மருந்தின், இன் ஐந்தாம் வேற்றுமை ஒப்புப் பொருள். விருந்து, பண்டாகுபெயர்.

(வி ரை.) விருந்து என்பது புதுமை என்னும் பொரு வளது. இந்தப் பொருளில் திருவள்ளுவர் தெய்வம் விருந்து’ என்று தொடங்கும் திருக்குறளில் ஆண்டிருத்தலைக் காண்க. ஆகவேதான் விருந்தின் நின்றேன் என்னும் தொடர்க்குப் புதியவகை இருக்கின்றேன் என்னும் பொருள் கூறப்பட்டது.

என்போல் குணத்தில் இழிந்தவர் இல்லைனப் போதும் எங்கும் நின்போல் அருளில் சிறந்தவர் இல்லை.இந் நீர்மையினுல் பொன்போலும் நீன் அருள் அன்னே எனக்குப் புதிேகண்டாய் மன்போல் உயர்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.

(பொ. - ரை.) அரசனைப் போல உயர்வு பெற்றிருக்கின்ற திருஒற்றியூரில் வாழ்கின்ற வாழ்வே வடிவுடை மாணிக்கமே! தாயே! என்னைப்போல எப்போதும் தீய குணத்தில் இழிந்த வர்கள் எங்கும் இல்லை. உன்னைப்போல. அருள் தருபவர்கள் எவரும் இலர். இந்தத் தன்மையினுல் பொன்போல் சிறந்த உன் திருவருளே எனக்குத் தருவாயாக.” (எ . து.)

(அ - சொ.) மன் - அரசன். நீர்மை தன்மை.

(இ - கு.) மன் என்பது மன்னன் என்பதன் ஈற்றுக் குறை. பொழுது என்பது போது என ஆயது மரூஉ வழக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/164&oldid=681654" இலிருந்து மீள்விக்கப்பட்டது