பக்கம்:திருவருட்பா-11.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! 72 திருவருட்பா

தெரிகிறது. வீதி உலா வரும் உற்சவமூர்த்தி சோதி விடங்கர் என்று அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இது போது மாசி மாதத்தில் நடக்கும் விழா கல்வெட்டின் மூலம் வைகாசியில் நடந்ததாகத் தெரியவருகிறது.

திருக்கானத்தி யுடையார் கோயில் மலைமேல் ஒரு மடம் இருக்கிறது. இதில் அடியார்கட்கு அ முது அளிக்க மான் யங்கள் விடப்பட்டன என்பது தெரிகிறது. தியாகமேகன் மடம், கூற்றுதைத்தான் சோமதேவர் மடம் எனும் பெயரிலும் மடங்கள் இருந்திருக்கின்றன. வீர நரசிங்கதேவன் நந்த வனம், ஆலாலசுந்தரர் (சுந்தரமூர்த் தி நாயனர்) நந்தவனம், திருக்கண்ணப்பர் தோட்டம் ஆகியவையும் இங்கு இருந்தன.

இராஜேந்திர சோழன் காலத்தில் இத் தலத்தில் கார்த் திகை தீப விழா, பெருஞ் சிறப்புடன் நடந்ததாக அறிய வருகிறது. இத்தலத்து முகத்தல் அளவைக் கருவிக்குக் காளத்தியுடைய ன் மரக்கால் என்பது பெயர். மேலே கூறப்பட்ட செய்திகள் அனைத்தும் திருக்காளத்தித் தலத்தில் கிடைத்த தமிழ்க் கல்வெட்டுகளால் அறியப்பட்டவை. இதை உற்று நோக்கும்போது திருக்காளத்தியில் முழுக்க முழுக்கத் தமிழ் மொழியே பேசப்பட்டு வந்ததை நன்கு உறுதிப்படுத்தலாம்.

இத் தலத்தின் மீது திருஞானசம்பந்தர் இரண்டு பதிகங் களேயும், அப்பர் ஒரு திருத்தாண்டகத்தையும், ஒரு பதிகத்தையும் பாடியுள்ளனர். நக்கீரர் பாடிய கைலை பாதி காளத்தி பாதி என்னும் நூலும் இத் தலத்தைச் சார்ந்ததே. இந் நூலப் பாடியே நக்கீரர் தம் குட்ட நோயை நீக்கிக் கொண்டனர். இத் தலத்திற்கு இரண்டு புராணங்கள் உண்டு. ஒன்று விரைநகர் ஆனந்தக் கூத்தரால் பாடப் பட்டது. அது திருக்காளத்திப் புராணம் எனப்படும். மற்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/182&oldid=681674" இலிருந்து மீள்விக்கப்பட்டது