பக்கம்:திருவருட்பா-11.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 88 திருவருட்டா

உசவை - பதுமை (பொம்கை). மந்தரம் . மந்தரமல. கொங்கை முலை.

(இ . கு, வாள். உரிச்சொல்,

(வி . தை.) இறைவி பல்வேறு சொற்களால் குறிக்கப் பட்டிருப்பதைக் காண்க. நாகண வாய்ப் புள் என்பது மைனு என்னும் பறவை ஆகும். இறைவியின் இனிய பேச்சுக்குப் பூவையும், கிள்ளேயும் உவமையாயின.மென்மைத் தன்மைக்கு உவமம் ஆ, பிற்று. ஆகாயம் என்பது பருப் பொரு ளாகக் கட்சி அளிக்காமல், நுண் பொருளாகக் காட்சி அளிப்பது போல இடையும் நுண்ணியதாய்க் காட்சி அளித் தலின் அந்தர நேர் இடை எனப்பட்டது என்று கூறனும் அமையும். அதுபோது அந்தரம் என்பது ஆகாயம் என்று பொருள்படும். மந்தரமலே திருப்பாற்கடலைக் கடைந்த போது மத்தாகப் பயன்பட்டது. அக் மலைபோலப் பருத்தும் வன்மையுற்றும் இருத்தலின் அது கொங்கைக்கு உவமை ஆயிற்று. இஃது உயர்வு நவிற்சி அணியின் பால்படும். (8.2)

பத்தர்தம் உள்ளத் திருக்கோயில் மேவும் பரம்பரையே கத்தமெய்ஞ் ஞான ஒளிப்பிழம் பேசித் சுகாநந்தமே நீத்ததின் சீர்செல எற்கருள் வாய்ஒற்றி நின்மலர்உன் மத்தத்தம் வாம மயிலே வடிவுடை மாணிக்கமே.

(பெ; . சை.) அன்பர்களுடைய மனமாகிய சிறந்த கோயிலில் அமர்ந்திருக்கும் மேலான பரதேவதையே : தூய அறிவாம் ஒளிப்பொருளே ! சித்சுகாநந்தமே! திருஒற்றியூரில் விளக்கும் துயராகிய தியாகராகிய பித்தரின், இடப்பாகத்தில் அமர்ந் திருக் கும் மயில்ே வடிவுடை மாணிக்கமே! தினமும் உன் சிறப்பைப் பேசும் வa iப்பை அருள் செய்வாயாக.” (எ . து.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/196&oldid=681689" இலிருந்து மீள்விக்கப்பட்டது