பக்கம்:திருவருட்பா-11.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 திருவருட்பா

வைகாசி கருட சேவை காஞ்சி வரதரின் கருட சேவை: யைப் போன்ற சிறப்புடையது.

திருஒற்றியூரில் சக்கரப்பாடி என்னும் தெருவில் வாணி யர் குலத்தில் பிறந்த சிவபத்தர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் கலியர் என்பது. அவர் கோயிலுக்கு விளக்கு ஏற்றும் தொண்டில் ஈடுபட்டவர். எண்ணெய் விற்றுத் 54. பொருள் நாளுக்கு நாள் குறைந்தது. ஆளுல், அன்பர் கம் தொண்டை முட்டின்றி நடத்தி வந்தார். கூலி வேலை செய்து எண்ணெய் விற்றும் தொண்டு செய்தனர். எண்ணெய் கொடுத்து விற்கச் செம்யும் பணியினையும் அவர் மரபினர் நிறுத்தி விட்டனர். தம் தொண்டுக்குத் தடை வரா திருக்கத் தம் மனைவியாரை விற்க விலை கூறிஞர். அல் bouLFST S T எவரும் முன் வந்திலர். ஆகவே எண்ணெய் வாங்கப் பொருள் இல்லாமல் தத்தளித்தார். என்றாலும், மனம் தளராமல் கோவிலுக்குள் சென்றார், அகல் களுக்கு வர்த்தி இட்டனர். எண்ணெய்க்குப் பதிலாகத் தம்மை அறுத்து அதன் வழியே வரும் செந்நீரைணக் ஊற்றி விளக்கெரிக்கக் கத்திக்கொண்டு அறுத்துக் கொண்டனர். இந்திலயில் திருவொற்றியூர்ப் பெருமான் தோன்றிக் காட்சி தந்தனர். அறுப்புண்ட இடமும் மறைந்தது; குருதியும் நின்றது. இறைவர் அவருக்குத் திருவருள் புரிந்தனர். அவரே கலிய நாயனுள் ஆவார்.

பட்டினத்தார் தமக்கு முத்திதரும் தலம் எது என்று இறைவரைக் கேட்டபோது, அவர்க்கு ஒரு பேய்க் கரும்பைத் தந்து, இக்கரும்பு எத் தலத்தில் இனிக்கிறதோ, அத்தலமே உனக்கு முத்தி தரும் தலம்’ என்று திருவருள் புரிந்தார். அல் கூாறே பட்டினத்தடிகள் இத்தலத்துக்கு வந்து அக்கரும்பைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/24&oldid=681719" இலிருந்து மீள்விக்கப்பட்டது