பக்கம்:திருவருட்பா-11.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலே

தவம் செய்தாள் ஆதலின், ‘திருஒற்றிப் பெம்மான் இடம் செய் பெருந்தவமே’ என்றனர். (10)

தாலே எனும்மறை அந்தங்கள் இன்னமும் நாடிஎனப் போலே வருந்த வெளிஒளி யாய்ஒற்றிப் புண்ணியர்தம் பாலே இருந்த நினைத்தங்கை ஆகப் பகரப்பெற்ற

மாலே தவத்தில் பெரியோன் வடிவுடை மாணிக்கமே.

(யொ ரை. வடிவுடை மாணிக்கமே வேதங்கள் நான்கே என்று கூறப்பட்ட அவ் வேதங்களும், அந்த வேதங் களின் அந்தங்க்ளும் இதுவரையில் தேடியும் காணமுடி யாமல் என்னைப்போல வருந்தவும், வெட்ட வெளியாகவும், பேரொளிப் பிழம்பாகவும் விளங்கும் திருஒற்றியூரின் புண்ணி யப்பொருளாய் உள்ள இறைவரின் இடப்பக்கத்தே இருந்த உன்னத் தங்கை என்று சொல்லுதற்குரிய வாய்ப்பைப் பெற்ற திருமால் தவத்தில் பெரியவனே ”. (எ - து.)

(அ - சொ.) மறை - வேதம். அந்தங்கள் . வேதாத் தங்கள். நாடி தேடி. பால் இடத்தில் பகர - சொல்ல. tof - திருமால்.

(இ - கு.) நாலே, ஏகாரம் தேற்றம். மறை அந்தங் கள், வெளி ஒளியா, உம்மைத்தொகை. பால், ஏழன் உருபு. மாலே, ஏகாரம் பிரிநிலை.

(வி - ர்ை.) ஒரு காலத்தில் வேதங்கள் பல வகையாக இருந்தன. அவ்வாறு இருந்தவற்றை வேதவியாசர் நான் காக வகுத்து வைத்தனர். இதனே வில்லிபுத்துாரார் பாரதம் தோத்திரமான தெய்வச் சுருதிகள் யாவும் நான்காகக் கோத் தவன்” என்று கூறுதலால் தெளிவாகிறது. எனவேதான் ஈண்டு நாலே எனும் மறை” எனப்பட்டது. ஈண்டுக்கூறப் பட்ட வேதங்கள் வடமொழி வேதங்கள். இவைதாம் இறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/53&oldid=681751" இலிருந்து மீள்விக்கப்பட்டது