பக்கம்:திருவருட்பா-11.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 திருவருட்பா

கோடா அருள்குணக் குன்றே சிவத்தில் குறிப்பிலரை தாடாத ஆனந்த நட்பேமெய் அன்பர் நயக்கும்இன்பே பீடார் திருஒற்றிப் பெம்மான் இடம்செய் பெருந்தவமே வாட மணிமலர்க் கொம்பே வடிவுடை மாணிக்கமே.

(யொ ாை.) தவருத அருள் குணம் நிறைந்த குன்றே: சிவபெருமான வணங்கிப் போற்றவேண்டும் என்னும் குறிப்பு ஒரு சிறிதும் இல்லாதவரை அடையாமல், போற்றும் அன்பர் கட்கு இன்ப நட்பாய் இருப்பவளே ! மெய் அன்பர்கள் விரும்பும் இன்பமே பெருமை நிறைந்த திருஒற்றியூர் இறைவனது இடப்பாகத்தில் அமர்ந்திருக்கும் பெருந் தவமே! வாடாத அழகிய மலர்கள் நிறைந்த வடிவுடை மாணிக் கமே!’ (எ . து.)

(அ .சொ.) கோடா தவரு.த. நயக்கும் - விரும்பும். கபீடு . பெருமை.

(இ . கு.) பெருமான் என்பதன் மரூஉ வழக்கு, பெம்மான் என்பது.

(வி - ரை.) இறைவியின் அருட்பண்பு என்றும் ஒரே நிலையில் இருந்து அன்பர்களுக்கு அருள் செய்தலின், கோடா அருள் குணக்குன் றே’ எனப்பட்டாள். பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆகிய மூன்று தேவர்களுக்கும் மேலான பரம்பொருள் சிவம். இதனைச் சைவசித்தாந்தம் சதுர்த்தம் என்று கூறும். இறைவி, அகந்தைக் கிழங்கை அகழ்ந்தெடுக்கும் தொழும்பர் உளக்கோயிற் கேற்றும் விளக்கு (மீனுட்சி அம்மன் பிள்ளைத் தமிழ்) ஆதலின், ‘அன்பர் நயக்கும் இன்பமே எனப்பட்டாள். திருஒற்றி யூரின் பெருமையினேக் காப்புச் செய்யுளின் விசேட உரையில் காண்க. இறைவி இறைவனது இடப்பாகத்தைப் பெறத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/52&oldid=681750" இலிருந்து மீள்விக்கப்பட்டது