பக்கம்:திருவருட்பா-11.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 திருவருட்பா

வேறு வகையில் நம் ஐயா கூறுகின்றார், அதாவது கங்கை யைப் பெண் வடிவில் அப்படியே முடியில் கொண்டால் பார்வதி தேவிக்குத் தெரிந்துவிடும் என்ற காரணத்தால் அவளே நீர் வடிவாக்கித் தலையில் கொண்டாராம்.

துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் இறைவி கங்கை ஆற்றைப் பற்றி வினவியதாகவும், அதற்குத் தக்க விடை யினே இறைவன் சொன்னதாகவும் கற்பனே செய்துள்ளார். அப்பாடல் சுவைமிக உடையது. அதாவது,

- ‘ஐயநின் சென்னிமிசை உறைகின்ற மடமங்கை

ஆர்என்ன உமை வினவவும் அன்னதொரு மடமங்கை அன்றுவெண் திரைகொழித்

தழ கொடுதண் புனல் எனத் துய்யஒளி ஆனனம் கரியவிழி காதுவாய்

தோயத்தில் உண்டோ என ச் சொல் அரும் கமலமலர் காவி மலர் கொடிவள்ளே

துரய செங் குமுதம் என்னப் பொய்யென நினைத்துநற் கொங்கையும் கூந்தலும்

புனல் இடை உண்டோ எனப் புற்புதம் சைவலம திதெனவே மறுத்துப்

பு:கன்றிடுதி நங்காய் எனத் தையல் அவ ளே என்ன நாளுெடு வணங்கிஎன்தன்

பிழைபொறுத் திடென்றே சங்கரன் உரைத்திடத் திருவுளம் மகிழ்ந்த சிவ

சங்கரி உமைகாக்கவே ‘ என்னும் பாட்டு. இதன் திரண்ட பொருள் சுவாமி தலையில் இருக்கும் பெண் யார்?’ என்று உமை கேட்டனள். சிவளுர், அது பெண் அன்று. அது நீர் என்றனர். உடனே உமை, நீருக்கு முகமும், கண்ணும், வாயும் இருக்குமா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/88&oldid=681789" இலிருந்து மீள்விக்கப்பட்டது