பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 திருவருட்பா

சீர்பூத்த செழுங்கமலத் திருத்தவிசில் வீற்றிருக்கும்

நீiபூத்த திருமகளும் நிலமகளும் அடிவருட என்று கூறுகிறது. நம் வள்ளலார் மீளுட்சி அம்மையார் சொக்கேசப் பெரும்ானின் திருவடிகளே வருடியதை ஈண்டுக் அக்டறிஞர்.

மதுரையில் வரகுண பாண்டியன் ஆட்சி செய்யும் காலத் தில் வட தேசத்திலிருந்து யாழ்வாசிப்பதில் சிறந்த ஏம நாதன் என்பவன் வந்தான். தன் வித்தை செருக்காய் தன்ளுேடு யாழ்வாசிப்பவர் எவரேனும் மதுரையில் உளரோ என்று அறை கூவினன். இதை அறிந்த அரசன் தன் ஆத்தான யாழ்ப் புலவரான பாண பத்திரர் என்பாரை அழைத்து ஏமநாதனுடன் யாழ் மீட்டுப் பாட வேண்டும் என்று கட்டளே இட்டான். அவ்வாறே பாடுவதாகக் கூறிவிட்டு நேரே மதுரைச் சொக்க லிங்கப் பெரு மானிடம் தன் நிலையைப் பற்றிப் பாண் பத்திரர் முறை யிட்டார். சிவபெருமான் தம் அன்பருக்கு அருள் செய்ய விறகு விற்கும் ஆள் போல் வேடம் பூண்டு, விறகு கட்டை யைத் தலைமேல் சுமந்து சென்று ஏ நைாதன் தங்கி இருந்த வீட்டுத் திண்ணையில் இறக்கிச் சாதாரி என்னும் பண்ணேப் பாடினும். இந்த இசையின் அருமையைக் கேட்ட ஏமநாதன் 'நீ யார்?’ என்று சிவபெருமானுகிய விறகாளேக் கேட்க அவர், தோன் ப. டைபத்திரன் அடியை. அவரிடம் சில நாட்கள் யாழ் இசை பயின்றவன். பிறகு நான் கிழவன் என்ற காரணத்தால் தள்ளிவிட்டார். அந்தச் சில நாள் பயிற்சி தான் இப்போது நான் பாடிய இசைக்குக் காரணம் என்று சொல்லிவிட்டுப் போயினர், ஏமநாதன் கிழவன் இசையே இப்படி இருந்தால் பாணபத்திரர் இசைப் புலமை ப்ெரிது : என்று அஞ்சி ஊரைவிட்டு ஓடினன். இந்த வரலாற்றை உளத்தில் கொண்டே ஈண்டு 'ப்ான்ன் தனக் கடிமை ஆளே