பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 57

என விறகேற்று விற்ருேய் ' என்று வள்ளல்ார் குறிப்பிட் டுள்ளனர். இதன் விளக்கத்த்ை மேலும் காண விழைவார் திருவிளையாடல் புராணத்துள் விறகு விற்ற படலத்தில காண்க. (27)

அடுத்தார் தமைஎன்றும் மேலோர் விடார்கள் அவர்க்குப்பிச்சை எடுத்தா யினும்இடு வார்கள்என் பார்அதற் கேற்கச்சொல்பூத் தொடுத்தார் ஒருவர்க்குக் கச்சூரி லேபிச்சைச் சோறெடுத்துக் கொடுத்தாய்தின் பேச்அருள்என் சொல்லு கேன்எண் குணக்குன்றமே.

(பொ. - ரை.) 'எட்டுக் குணங்களையுடைய இறைவனே! எக்காலத்தும் மேன்மையான குணம் பொருந்தியவர்கள் தங்களே எவரேனும் சார்ந்தால் அவர்களைக் கைவிடார். தம்மை அடுத்தவர்களுக்குப் பிச்சை எடுத்தாகிலும் உணவு கொடுத்து ஆதரிப்பார்கள் என்று உலகத்தார் சொல்வர். அப்படிச் சொல்வதற்கு இணங்க, சொல்லாகிய மலர்களை க் கொண்டு, பாமாலையினேக் கட்டிய சுந்தரமூர்த்தி சுவாமி களுக்குத் திருக்கச் சூரில், பிச்சைச் சோறு பெற்றுக் கொடுத் தாய். இப்படிச் செய்த உன் பேரருளேப்பற்றி நான் என்ன சொல்வேன்?' (எ . து.)

(அ - செ.) எண்குணம் - எட்டுக் குணங்கள். ஒருவர் . சுந்தரமூர்த்தி சுவாமிகள். சொல்யூ - பாமாலை.

(இ . கு.) எட்டு-குணம்.

(வி - ரை.) இறைவனுக்குரிய எட்டுக் குணங்கள்: தன் வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களினின்று நீங்குதல், பேரருளுடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை என்பன.

திருக்கச்சூர் என்பது சிங்கப் பெருமாள் கோவில் இரயில் அடியிலிருந்து வடமேற்கே ஒன்றரைக் கல்லில் உள்ள ஒரு