பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 திருவருட் சிந்தனை

எண்ணிய எண்ணம் எய்தும் விழிப்பினை அருள்க!

இறைவா, நின் அருள் திறத்திற்கு யாதுமோர் குறை வில்லை. நான் வளர்வதற்கு நீ வழங்கியருளிய வாய்ப்பு கள் எண்ணில. ஆனால், நான் வாழ்ந்தேனில்லை. உன் ாைல் ஒன்றும் குறைவில்லை. -

நான் வெள்ளத்துள் நா வற்றிச் ச வதைப் போல் செத்துக் கொண்டிருக்கிறேன். மழை பொழிந்தாலும் தளிர்க்க வேண்டியவை மரங்கள் அல்லவோ,

வெள்ளைப் பேருக்கேயானாலும் அள்ளிக் குடிக்க வேண்டி யவை உயிர்களேயன்றோ? கதிரொளி காய்ந்தாலும் காண வேண்டியவை கண்கள் அன்றோ. -

இறைவா, நின்னருள் வெள்ளத்திற்கு யாதொரு குறையுமில்லை. p ; நின்னருளைப் பெற்று வாழ்தலுக்கு எனக்கு விதிப்புநிலை தேவை. ... .

எப்போதும் ஆயத்து நிலையில் இருத்தல் வேண்டும். நானோ துரங்கி வழிகின்றேன். கண்களை மூடிக்கொண்டே உலகத்தைப் பார்க்கிறேன். -

இறைவா, என் சிறுமையைத் தள்ளி ஆட்கொள்க. எப்போதும் விழிப்புநிலையில் என் உணர்வு இருக்க வேண்டும். எப்போதும் எதையும் சிந்தித்து உடன் முடிவு செய்யும் அறிவு நிலையில் என் உணர்வு இருக்கவேண்டும்.

எப்போதும் எதையும் எந்தவகை உழைப்பையும் ஏற்றுச் செய்யும் நிலையில் என் உடல்நிலை ஆபத்தமாக இருக்க வேண்டும். இறைவா அருள் செய்க! w

விழிப்பு உடையார் வீழ்ச்சி அடையார். ஆயத்த நிலை யில் அடையாத ஆக்கங்கள் இல்லை. இறைவா, அருள்

செய்க. - -

என் உயிர் நிலையில் துடிப்பினை அருள் செய்க. எண்ணிய எண்ணியாங்கு எய்தும் விழிப்பு நிலையினை அருள் செய்க! -