பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{} திருவருட் சிந்தனை

பொய்ம்மையான உலகவாழ்விலிருந்து எடுத்தாள்க:

இறைவா! காரைக்கசல் அம்மையை அம்மை’ என்று அழைத்த அண்ணலே! காரைக்காலம்மையார் தலையால் நடத்து கயிலையை அடைந்ததாகக் கூ றுவர். நானும் தலைகீழாக நடக்கவே முயலுகின்றேன்.

ஆம், இறைவா! என்னை த லு வ ர்த்தை புகழ்த் இ சொன்னால் போதும். அந்தப் புகழ்ச் சொற்களை நான் முகமன் என்று எடுத்துக் கொள்வதில்லை. அல்லது ஆர்வ மூட்டும் சொற்களாக எடுத்துக் கொள்வதில்லை.

என்னைப் புகழ்ந்தால் புகழுக்கு உரியவனாகவே ஆகி விடுகிறேன். அதுமட்டுமா? தலை கனத்துவிடுகிறது. உடனே உலகியலுக்கு உரிய ந.ை முதலியன இல் லாமல் தலைகீழாக நடக்கிறேன். நீ என்னைத் தடுத்தாளக் கூடாதா? இறைவா! தடுத்து ஆட் கொள்க!

திருக்கோயிலில் சண்டிசரி சந்நிதி உள்ளது. சண்டிசர், கடமைகளை நியமமாகக் கொண்டொழுகியுவர். பெற்ற தந்தை என்று பாசத்தைக்கூட, கடந்து குறிக்கோளை உயி ரெனக் கொண்டவர். தமது குறிக்கோளுக்கு இடையூறாக இருந்த தந்தையின் காலையே தடிந்தவர்; உன்னால் சண் டிசப் பதம் அளிக்கப் பெற்றவர். அவர் சந்நிதி கூட சின்ன வாயில் உடையது. -

இறைவா, நான் எதைக் குறிக்கோளாகக் கொண்டுள்

ளேன்? ஏதோ கிடைத்த வேலைகள் சிலவற்றைச் செய்

கிறேன். இது சீரா ன வாழ்க்கையன்று. தலைகீழான

வாழ்க்கை. இந்தப் பொய்ம்மையான வாழ்க்கையிலிருந்து

எடுத்தாள்க. குறிக்கோளில் நிற்கும் வாழ்வைத் தருக!

அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் பாங்கைத் தருக!

Q *