பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி அடிகளார் 21

நாளும் ஊதியம் தேட அருள் செய்க!

இறைவா, முப்புரம் எரித்த அண்ணலே! சாவுவரத்தான் செய்கிறது. ஒரு மரத்தினின்று பழுத்தமட்டை விழ்கிறது - இது செத்த பிணம்: பழுத்துக் கொண்டுள்ள மட்டை- இது சாம்பினம்! இளமட்டை-இது நாளைய பிணம். இது நியதி.

ஆனால்,இந்த LITT 9 என்னை விழிப்படையச் செய்யவில்லை. சில சமயங்களில் பயமடையச் செய்திருக் கின்றன. - *. o

அதாவது, நாமும் செத்துவிடுவோம் என்ற பயமே! அது கூட அந்தப் பொழுதில்தான். அடுத்த நொடி வழக்கம் போல ஊதியமிலா வெற்று வாழ்க்கை. உள்ளிடில்லாச் சுரைக் குடுக்கை போல வாழ்க்கை வறிதே கழிகிறது.

இறைவா, என்ன்ைக் கா ப்பர் ற்று. எனக்கும், சாவு வரும் என்பதை உணர்த்து. மரணக் கடிவாயிலில் நிற்கும் ஒர் உயிரே நான், என்பதை உணரச் செய்.

நாளை எனக்குரியதில்லை. அது யாருக்கும் எதற்கும் உரிமையாகலாம்-இன்ன்றய நாள் நான் வாழும் நாள். என்னிடத்தில் பூரண உரிமையோடிருக்கும் நாள்.

இன்றைய நாளை, முழுமையாகப் பயன்படுத்துதல் என்முதற்கடமை. அறிவைத் தேடுதல், ஆள்வினையியற்றல் பொருள் செய்தல், அன்பு காட்டுதல், தொண்டு செய்தல்இவைகளை நாண்ள ஒன்று, ஒத்திப்போடாமல் இன்றே செய்யும் பாங்கினைத் தா. -

இன்றைய நாளை, நான் வாழும் நாளாக ஊதியம் தேடும் நாளாக ஆக்இஅருள்:ஜெய்க:ஐகயிருக்கு ஊதியம் தேடிவிட்டால் சிெத்தாலும் கவலை இல்லை. அருள்க!