பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

832 திருவருட் சிந்தனை

இறைவா என் உள்ளத்தில் ஞான ஒளி ஏற்றுக!

இறைவா, நேற்று நன்றாக வாழ அருள் புரிந்தனை. நன்றிப் பெருக்கு நிறைந்த போற்றுதல்கள் ஆயிரம், ஆயிரம் உனக்கு, இறைவா, இன்றும் வாழ அருள்க.

இறைவா, நீ தாய்: சேயாகிய என் தேவை உனக்குத் தெரியாதா? அதை நீயே அருள் செய்க: இன்று நீ பாராமுகமாக இருப்பது ஏன்? நான் பாவி என்பதனாலா? தாயாக விளங்கும் நீ என்னைப் பாவி என்று புறக்கணிக் s6)I ir? - * * * * * -- * { -- .

இறைவா நீ புறக்கணித்தால் வேறு யார் எனக்குத் துணை? நானா பாவம் செய்கிறேன்! நீ, கொடுத்த ஊன் பொதி உடல் தானே பாவத்தைத் தூண்டுகிறது: என் உடல் அதன் தேவைகளையே ந: டுகிறது:

என் உடலுக்குத் தியாகமோ, அர்ப்பணிப்பு"உணர்வோ இல்லை. இறைவா உடலைத் திருத்து. என் உடலைச் சமூக உழைப்பில் ஈடுபட அருள் செய். * ... -

எளிதில் நெகிழ்ந்து கொடுக்கக்கூடிய உருக்கத்தினைத் த என் உள்ளத்தில் ஞான ஒளிவிளக்கை ஏற்றுக. நின் அருளின் பத் தேனை - உலப்பிலா ஆனந்தத்தை வழங்குக. இறைவா, ஒரு வேண்டுகோள். நீ என் கூடவ்ே வர வேண்டும். ஆம் இறைவா, நான் எங்கு போனாலும் நீ வரவேண்டும்!

நான் வாழ்க்கையில் வழுக்கி விழுந்து விடாமல் என்னைத் தொடர்ந்து வந்து காப்பாற்ற வேண்டும்! தவறி விழுந்து விட்டால் தூக்கவேண்டும். - -,

இறைவா, நீயே என் செல்வம். நீ பெருங்கருணை யுடன் என் உடலிடத்தில் எழுந்தருளி அருள் செய் கின் றனை. இறைவா, ஆயிரம், ஆயிரம் போற்றிகள்!