பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



Q

திருவருட் சிந்தனை

இறைவா, ஒழுங்கினைக் கடைபிடிக்க அருள் செய்க:

‘ஒழுங்குபடச் செய்க! ஒழுங்கு படவாழ்க!’ என்று அறிவுறுத்துகிறாய். என்னால் முடியவில்லையே! பலரோடு கூடிவாழ்கின்றேன். அவர்களின் உறவுகள் என்னிடம் ஏராளமான பாதிப்புகளை உண்டாக்குகின்றன; தர்க்கங் களைச் செய்கின்றன! இதனால் தான் விரும்புகின்ற ஒழுக் கத்தில் நிற்க முடிய வில்லை.

இறைவா, ஒழுங்கு இருந்தால் போதுமா? ஒழுக்கமும் வேண்டாமா? இறைவா, என்ன சிரிக்கிறாய் இரண்டும் ஒன்றேதானா? பொறிகளால் ஒழுகப்படுவது ஒழுங்குசெயல்முறைகளில் காணப்பெறுவ்து ஒழுங்கு புலன் களால் ஒழுகப் பெறுவது ஒழுக்கம்! இவ்விரண்டும் தேவை! ஏன், இறைவா, ஒழுங்கு ஒழுக்கம் இவற்றில் எது முதல் எது எதற்கு ஆதாரம்? ஒழுங்கு-ஒழுக்கத்தினைப் பிரித்து முதனிலைப் படுத்த முடியாது? அப்படியா, இறைவா? ஆதார நிலையும் அப்படித்தானா?

புலன்களில் - மின்தில் - உயிரில் நின்றியங்கும் ஒழுக்கங்கள் புறத்தே ஒழுங்குகளாக இயங்குகின்றன: இறைவா, புறத்தே பொறிவழி வாழ்க்கையில் ஒழுங்கு களைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஒழுக்கத்தினை வளர்த்துச் கொள்ளலாம்; பாதுகரித்துக் கொள்ளலாம்.

ஏன் இறைவா? ஒழுக்கம் இல்லாதவர்கள் நிலை என்ன? ஒழுக்கம் இல்லாதவர்கள் ஒழுங்குகளைக் கடைப் பிடித்தால் அவ்வழி'ஒழுக்கமும் வத்தமையும், -

இறைவா, நீ வசமாக மாட்டிக் கொண்டாய இறைவா, ஒழுங்கு, ஒழுக்கத்தைத் தரும், வளர்க்கும், ப்ாதுகாக்கும்:

இறைவா, நான் ஒழுங்காக வாழ - ‘கடமைகளைச்

செய்ய அருள் செய்க: இறைவா! இதுவே நியதி: விதி: அருள் செய்க!