பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி அடிகளார் 98.

இறைவா, மகிழ்வுடன் வாழ அருள் செய்க!

இறைவா, ஞாலமே! விசும்பே: இவை வந்து போம் காலமே! ஞானத் தலைவனே! நின் திருவருள் போற்றி! போற்றி!! இறைவா, எனக்கு மகிழ்வும், இன்பமும் தேவை. அருள் செய்க! -

நான் என் புத்தியைக் கொண்டு மகிழ்வினைத் தேடித் திரிந்தேன். கண்டனவே களிப்பு. இது என் நிலை:

இறைவா, நான் களிப்பை, சுவை நிறைந்த சோற்றில் அடைய முயன்றேன். ஆனால் அதில் அது இல்லை. களிப்பை விரும்பி அணிகலன் ஆடைகளை ஏற்றுக்கொண் டேன்! அவா அடங்கிய பாடில்லை. உற்ற காதலில் மூழ்கிப் பார்த்தேன். ஒன்றும் பயன் இல்லை! என்னை ஆட்கொள். ஒன்றுக்கும் உதவாத பெல்லா நாயேனை ஆட் கொண்டருள் செய்க! -

நான் இன்பத்தைத் தேடுகின்றேன். ஆனால் இன்பம் இருக்குமிடத்தில் தேடவில்லை! உண்மையான இன்பம் ஆசையில் தோன்றாது. அறிவால் காண இயலாது. இறைவா, எனக்கு ஞானத்தினைக் கொடு. இந்த உலகின் அமைவுகளை - நிகழ்வுகளைத் தெரிந்து தெளியும் ஞானத்தினை அருள் செய்க! .

ஞானமுடையோனுக்கே இந்த உலகம் இந்த உலகத்தில் ஞானமுடையோனுக்கே ஆக்கம், இன்பம்: இறைவா, ஞானத்தைத் தந்தருள் செய்க: ஞானம் தெளிவில் பெறுவது. இறைவா, அருள் செய்க! நில்லாதனவற்றை நிலையெனக் கொண்டாடும் பேய்த்தனத்தினின்று மீட்டருள்க. . -

இந்த உலகின் நடையை மெய் என்று கருதாது ஊடுருவி மெய்ப்பொருள் தோறும் உணர்வினைத் தந்தருள் செய்க! ஞானத்தினால் என்னை ஆட்கொள். வாழ்வித்திடு. மகிழ்வுடன் வாழ்ந்திட அருள் செய்க.