பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 திருவருட் சிந்தனை

அருள் வாழ்வினை அருள் செய்க!

இறைவா, நெய், பால், உகந்தாடும் இறைவா, நீ ஏன் நெய், பால் உகந்தாடுகின்றாய்! இறைவா, நன்றருளிச் செய்தனை நெய், பால், சின்னநீ. எதன் சின்னம்? அன்பின் சின்னம். அன்பின் பொழிவு சேவையின் சின்னம். -

மனிதன் உண்ணாதனவாகிய தவிடு. வைக்கோல் இவையே பசுவின் உணவு. சுவையற்ற உணவைத்தின்னும் பசு எனக்கு அமுதமாகிய பாலைப் பொழிந்து தருகிறது. ஒரு பசு தன் வாழ்நாளில் 24, 980 பேருக்கு ஒரு வேளைக் குத் தேவையான பாலைப் பொழிந்து தந்து வளர்க்கிறது. ஒரு பசு, தன் தலைமுறையில் தான் தன் வழிக்கன்று கள் மூலம் 4, 75, 600 பேருக்சு ஒரு வேளைக்குரிய பாலை வழங்கிக் காப்பாற்றுகிறது. இத்தகைய வாழ்க்கை முறை, பகுத்தறிவு படைத்த மனிதனுக்குக் கைகூடவில்லையே! எனக்கு கைகூடவில்லையே. - - -

நான், எனக்கே நன்மை தேடி அலைகின்றேனே தவிர என்னால் மற்றவருக்கு என்ன நன்மை என்று ஆராய்வ தில்லை, எண்ணுவதில்லை: இறைவ் , ஏன் இத்த இழிபிறவி? . . . .

என் வாழ்க்கை மற்றவர் வாழ்க்கையின் தேவையாக மாறி வளர்ந்து விட்டால் நான் என் வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். என் வாழ்க்கை தானே நடக்கும். அன்பென்ற அமுதம் பொழிந்து தந்து என்னை வாழ் விக்கும் பசுவையே நான். காப்பாற்றுவதில்லையே. இறைவா, என்னை இந்நிலையிலிருந்து எடுத்தாள்க. என் புத்தியினைப் பொருந்துமாறு திருத்துக. -

நான் வாழ்தலுக்கு, உரிய சாதனம் பிறரை வாழ்வித் தலே என்ற உண்மையை அறிந்து, பணி செய்யும் பாங்கினைத் தந்தருள் செய்க! -