பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி அடிகளச் 35

வாழும் நெறியில் நிறுத்தி அருள்க!

இறைவா, சாவா, மூவா மருந்தே போற்றி இறைவன: என் வாழ்க்கை நகர்ந்து கொண்டே இருக்கிறது. காலனின் அழைப்புக்குரல் கேட்கிறது.

காலனின் தூதர்கள் அதிவேகமாக முன் கூட்டியே வந்து அமுக்கிப் பிடிக்க முயற்சி செய்து நோய்ப் படுக்கையில் படுக்க வைக்கின்றனர். நான் சாகப் பயப்படுகின்றேன். நான் வாழ ஆசைப்படுகின்றேன்.

இறைவா, ஆசைப்பட்டால் போதுமா: ஆசைகளை நிறைவேற்றுவது முயற்சி அல்லவா? இறைவா, என்னைக் காப்பாற்று! காலனிடமிருந்து காப்பாற்று இந்த ஒரு தடவை மட்டும் என் சாவைத் தள்ளிப் போடு சில ஆண்டு களுக்காவது தள்ளிப்போடு. - - - . . . “

எஞ்சிய ஆண்டுகளிலாவது வாழ்ந்திட முயற்சி செய் கின்றேன். இங்கே வாழ்ந்தால்தானே ச வுக்குப் பிறகும் நான் வாழலாம்: ஆம் இறைவா, நான் நன்மையே எண்ண வேண்டும்! எண்ணிய நன்மைகளையே செய்ய வேண்டும்.

இந்த உலகில் எல்லா உயிர்களிடத்தும் நான் அன்பு காட்ட வேண்டும். அவற்றின் துன்பத்தை என் துன்பமாக எடுத்துக் கொண்டு மாற்றிடுதல் வேண்டும். உண்பித்து உண்ணல், மகிழ்வித்து மகிழ்தல், வாழ்வித்து வாழ்தல் இதுவே வாழும் முறைமை. இந்த முறையில் நான் வாழ்ந்திட அருள் செய்க! - - - -

என் வாழ்க்கையில் நன்மையே செய்க தீமைகள் இல்லாத நன்மையை நாடிச் செய்திடும் தன்னெறியில் -வாழும் நெறியில் நிறுத்தி அருள்க. நான் வாழ்தல் வேண்டி நின்னை இரந்தனன்! இறைவா, அருள் செய்க!