பக்கம்:திருவருட் பயன்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 தம் நோயின் வருத்தத்தை அவருடன் அவ்வீட்டினுள்ளே வாழும் நெருங்கிய உறவினர் உள்ளவாறு அறிந்து அந் நோயினத் தீர்க்க முயல்வார்களேயன்றி, அவ்விட்டிற்குப் புறம்பே சேய்மைக்கண்ணே வாழும் அயலாராகிய ஏனே யோர் அறிந்து ஆவன செய்தல் இயலாது. அதுபோலவே, உயிர்களின் உள்ளத்தில் அனுதியேபற்றியுள்ள ஆணவமலத் துன்பத்தை, உயிர்க் குயிராய் உள்நின் றுணர்த்தும் இறை வனே அறிந்து குருவாக எழுந்தருளிவந்து தீர்ப்பதன்றிப் புறம்பேயுள்ள உலகத்தார் அறிந்து தீர்த்தல் இயலாது என அறிவுறுத்தலின், இக்குறட்பா பிறிதுமொழிதல் (ஒட்டு) என் னும் அணி தழுவியதாகும். - - - இனி, அகத்துறுநோய் என்றது, சரீரத்தினுள்ளே பற்றிய நோய் என்றும், உள்ளினர் என்றது, உடம்பினுள்ளே தங்கிய ஆன்மாவை என்றும், சகத்தவர் என்றது, தனக்கு வேருகிய பெண்டாட்டி பிள்ளே பிதா மாதா முதலியோர் என்றும் கொண்டு, சரீரத்திலே ஒரு வியாதி வந்து பொருந்தி னுல் சரீரத்துக்கு உடனுயிருக்கிற ஆன்மா அறிகிறதேயல்லாமல், பெண்டாட்டி பிள்ளே பிதா'மாதா சுற்றத்தார் அறிவார்களோ; அப்படிப்போல ஆன்மாவினிடத்திலே யிருக்கிற அறியா மையை உயிர்க்குயிராய் இருக்கிற பரமசிவனே ஆசாரியமூர்த் தமாய் எழுந்தருளிவந்து நீக்குகிறதேயல்லாமல் கற்றபேர் கேட்ட பேரர்லே ஆகாது’ எனப் பொருளுரைப்பர் சிந்தனே யுரையாசிரியர்.உயிர்களின் அகத்தே பற்றியுள்ள ஆணவமல் மாகிய நோயினையறிந்து புறத்தே குருவாய் எழுந்தருளி வந்து அகற்றுவதற்கு, உயிர்க்குயிராயுள்ள முதல்வலைன்றி உலகத்தாராகிய ஏனையோரால் இயலாது என்பதாம். இப்படிப்பட்ட ஞானுசிரியனே நம்மால் அறிதல் கூடுமோ என வினவிய மானுக்கர்க்கு அறிவுறுத்துவதாக அமைந்தது அடுத்துவரும் குறட்பாவாகும்.