பக்கம்:திருவருட் பயன்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 இனி, இங்ங்னம் போதம் ஆம் மெய்யுடன் எழுந்தருளிய இறைவனே உள்ளவாறு உணர்தற்குரிய உபாயம் யாது என வினவிய மாணுக்கர்க்கு உணருமாறிதுவென எடுத்துக் காட்டுத் தந்து உணர்த்துவது, அடுத்துவரும் குறட்பாவாகும். 45. பார்வையென மாக்களைப் பற்றிப் பிடித்தற்காம் போர்வையெனக் காளுர் புவி. இ-ள் : விலங்குகள் பறவைகளைப் பிடித்தற்கு அவ்வவற்றின் வடிவாற் செய்த வேகம்போல, மிக்க தெய்வவடிவங், கண்டு அஞ்சி வெருளாது, மனிதரைத் தன் வயத்தாக்கிக் கோடற்பொருட்டு அருள் போர்த்துக்கொண்ட மானுடவுருவாகிய குருவடிவினைப் போர்வையாக அறிய மாட்டாவாம் இவ்வுலகு. இவை மூன்று பாட்டாலும் அகளமாய் நிறைந்த அருளே குருவுருவுதரித்து வந்ததென்பதனை அறியாதார் இழிபு கூறப்பட்டது. விளக்கம்: குருவடிவாகிய திருமேனி, இறைவன் உயிர் களேத் தன்வசப்படுத்தி ஆட்கொள்ளுதற் பொருட்டுக் கொண்ட போர்வையென்பது உணர்த்துகின்றது. பார்வை என்றது, வேட்டுவர்கள், மான் முதலிய விலங்கு களேப் பற்றிப் பிடித்தற்பொருட்டு அவ்வவ்வினத்தில் முன்பே பற்றிப்பழக்கி நிறுத்திய மான் முதலிய பார்வை மிருகங்களே. இவை தீவகம் எனவும் வழங்கப்படும். என-உவமவுருபு. தாமே ஆராய்ந்துணரும் அறிவுவன் மையில்லாத ஆன்மாக் களே மாக்கள் எனக் குறித்தார் ஆசிரியர். மாக்களைப் பார்வை

  • மாக்களை முன் என்பது சிந்தளையுரையாசிரியர் கொண்ட படம். காளுபுவி என்பது, நிரம்ப அழகிய தேசிகர் கொண்ட பாடம்