பக்கம்:திருவருட் பயன்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|(} ] இ~ள்: மத்திரமுதல் கலையிருகிய மூவிாண்டு அத்து வாவுக் கடந்த வீட்டு நெறியினே வெளிப்படுத்தும் கிறைந்த ஞானத்தினையுடைய இறைவனே, குருவுருக் கொண்டு வாாாதவிடத்து, அதனே அறிய வல்லார் யார்? ஒருவரும் இல்லையென்பதாம். இதல்ை, நிறைந்த அறிவனகிய இறைவனே உருக் கொடு வரினல்லது உண்மையை யுணர்தல் கூடாதென்பது கூறப்பட்டது. விளக்கம்: இறைவன் குருவாய் வந்துணர்த்தினல்லது உயிர்கள் உண்மைப் பொருளே யுணர்தல் இயலாதென்பது உணர்த்துகின்றது. - எல்லாம் அகன்றநெறி அருளும் பேரறிவான், வாராத பின் அறிவார் ஆர் என இயையும். எல்லாம் அகன்றநெறி என்றது, மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம். கலே எனப்படும் அறுவகை வழிகளேயும் நீங்கி வீடுபேற்றினே அடைதற்குரிய மெய்ந்நெறியாகிய ஞானத்தை. மந்திரங்கள் பதங்கள் வன்னங்கள் புவனங்கள் தத்துவங்கள் கலேகள் ........... பரந்தநெறி அறுவகையும் ஒருவி நினேவரிதாம் பர பதத்துள் உயிர்விரவப் பயிற்றுமன்றே (சிவப்பிரகாசம்-9) என வரும்பகுதி, எல்லாம் அகன்றநெறி அருளும்’ என்பதற் குரிய விளக்கமாக அமைந்துள்ளமை இங்கு நினைக்கத்தகுவ தாகும்.பேரறிவான்.நிறைந்த ஞானவுருவினனுகிய இறைவன். வருதல்-குருமேனிதாங்கி எழுந்தருளுதல், வாராதபின்-வாரா யிைன்; பின் என்பது வினேயெச்சவிகுதி. அறிவார் ஆர்.கட் புலனுக்குப் புலப்படத் தோன்ருது அருவாய் மறைந்துள்ள அம்முதல்வனே உய்த்துணர்ந்து அறியும் அறிவுவன்மையுடை