பக்கம்:திருவருட் பயன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

திருவருட்பயன்

<article>

உமாபதிசிவன் என்னும் பிள்ளைத்திருநாமத்திற்கும் இந்நூற்கும் முதல்வராகிய கொற்றவன்குடி முதலியார், அறம் பொருள் இன்பம் விடு என்னும் நான்கினுள் விட்டுநெறி காட்டுவான், தம்மால் எடுத்துக்கொள்ளப்பட்ட இலக்கியம் இடையூறின்றி யினிது முற்றுதற்பொருட்டு, ஆதிக்கண்ணே கரிமுகக் கடவுளை வணக்கஞ்செய்தருளுகின்றார்; வழிபடு தெய்வ வணக்கஞ்செய்து, மங்கலமொழி முதல் வகுத்தெடுத்துக்கொள்ளப்பட்ட இலக்கண இலக்கியம் இடுக்கனின்றி யினிது என்பாராகலின்.

காப்பு

    நற்குஞ் சரக்கன்று நண்ணிற் கலைஞானங்
    கற்குஞ் சரக்கன்று காண்.

இதன் பொருள்:- அடைந்தோர்பாற் செய்யும் நல்லருளினைடைய யானை முகத்தினையும், என்றும் ஒருபடித் தாயிருக்கும் இளமையினையும் பெற்ற கடவுளை, ஒருவர் மன மொழி மெய்களால் வந்திப்பாராயின், அவர்க்கு வேதாகம புராண முதலியகலைகள் யாவும், வருந்திக்கற்கும் பண்டமல்ல என்றவாறு. இதனால், தானே எளிதின் வரும் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/24&oldid=513253" இலிருந்து மீள்விக்கப்பட்டது