பக்கம்:திருவருட் பயன்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

உலகத்து ஆனைகளெல்லாம் அடைந்தோர்பால் துன்பஞ் செய்தலின், இதனை நற்குஞ்சரக்கன்று என்று அருளிச் செய்தார். யானை அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் என்றறிக. இஃது ஆகுபெயர்.

விளக்கம் : குஞ்சரம் - யானை, இஃது ஆகுபெயராய் யானை முகத்தினையுடைய பிள்ளையாரை யுணர்த்தியது. கன்று என்பது இளமைபற்றிய மரபுப் பெயர். நற் குஞ்சரக் கன்று என்புழி நன்மை என்றது, எல்லாவுயிர்களையும் இடர்நீக்கி, உய்யக் கொள்ளுந்திறத்தில் மூத்த பிள்ளையார்பால் இயல்பாக நிகழும் அருளாகிய நலத்தினை நல் என்பதற்கு, நல்ல ஞான சொரூபம் எனப் பொருள் உரைப்பர் சிந்தனயுரையாசிரியர். நண்ணுதல் - மனமொழி மெய்களால் வழிபடுதல். கலைஞானம் - நூலறிவு. சரக்கு-பிறர்பாற் கேட்டுப் பெறுதற்குரிய அரும்பொருள். புறத்தே ஒருவரையடுத்துக் கற்றறிதற்குரிய பொருள் அன்று எனவே மூத்த பிள்ளையாரை வழிபட்ட அளவில் அவர் உள்நின்றுணர்த்த அரிய கலைகள் எல்லாம் எளிதின் வந்தடையும் என்பதாம்.

க. பதிமுதுநிலை

அஃதாவது, மேலாகிய இறைவனது இயல்பு.

    1. அகர வுயிர்போ லறிவாகி வெங்கும்
       நிகரிலிறை நிற்கும் நிறைந்து.
இ-ள் : அகரமாகியவுயிர் எழுத்துக்களெல்லாவற்றினும் பொருந்தி வேறற நின்றாற் போலத் தனக்கோர் உவமனில்லாத் தலைவன், உலகுயிர் முழுவதும் ஒழிவற நிரம்பி ஞான வுருவாய் அழிவின்றி நிலைபெறும் என்க.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/25&oldid=513254" இலிருந்து மீள்விக்கப்பட்டது