பக்கம்:திருவருட் பயன்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



15

'போகாப் புகல்” என்றது, சார்புணர்ந்து என்னுந் திருக்குறளிலமைந்த சார்பு என்னும் சொற்பொருளையும் அடியொற்றியமைந்தனவாகும்.

   "ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
    போக்குவாய்"  (சிவபுராணம்)

எனவரும் திருவாசகத் தொடரை நினைவுபடுத்தும் முறையில் இத்திருவருட்பயனாகிய குறள் அமைந்திருத்தல் அறிந்து மகிழத்தக்கதாகும்.

இத்தகைய முதல்வன், எவ்வுருவினன் என வினவிய மாணாக்கர்க்கு இன்னவுருவினன் என அறிவுறுத்துவதாக அமைந்தது அடுத்து வரும் குறட்பாவாகும்.

    5. அருவும் உருவும் அறிஞர்க் கறிவாம்
       உருவும் உடையான் உளன்.

இ-ள்: சிவம் சக்தி நாதம் விந்து என்னும் அரு வடிவு நான்கும், மகேசன் உருத்திரன் மால் அயன் என்னும் உருவடிவு நான்கும் உடையன், அவ்விறைவன் அறிவுடையாரது உள்ளத்தின் தோன்றும் ஞானவுருவினையும் உடையனாகலான்.

அருவும் உருவும் உளனெனவே, அருவுருவாகிய சதாசிவ வடிவமென்பது கூற வேண்டாவாயிற்று.

    "சிவம் சத்தி நாதம் விந்து சதாசிவன் திகழும் ஈசன்
     உவந்தருள் உருத்திரன்தான் மால் அயன் ஒன்றி
                                              [னொன்றாய்
     பவந்தரும் உருவநாலிங் கருவநான் குபயமொன்றா
     நவந்தரு பேதமாக நாதனார் நடிப்பரென்ப "
                                           (சித்தியார்.சுபக். 164)

என்றும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/38&oldid=514324" இலிருந்து மீள்விக்கப்பட்டது