பக்கம்:திருவருட் பயன்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



28

திருவடியை அடைந்தாரது தொகையும், மேல் அடைதற் குரியாரது தொகையும் தம்மில் ஒக்கும்.

எனவே அளவில் என்பதாம். ஈற்றில் நின்ற தொகை, நான்கனோடுங் கூட்டப்பட்டது. இதில் உயிருண்மை யுடைத்தெனக் கூறியது எதனாலென்னில், பொருளுண்மை பெற்றே அதனியல்பு கூற வேண்டும்; பித்திகையுடைத் தாயே சித்திரமெழுத வேண்டுமாறுபோல.

இதனால், உயிர்களது உண்மையும் மிகுதியும் கூறப்பட்டன.

விளக்கம் : கடவுள் உண்மை கூறிய பதிமுது நிலை என்னும் அதிகாரத்தை அடுத்து உயிர்களது உண்மை கூறுவதாக அமைந்தது, உயிரவைநிலை என்னும் இரண்டாம் அதிகாரமாகும். பதி (இறைவன்) ஒருவனே ஆக உயிர்கள் எண்ணில் ஆகலின் உயிரவை எனப் பன்மைச் சொல்லாற் குறித்தார். அவை என்றது, அவன் அவள் அது என இவ்வாறு அவயவப் பகுப்புடையனவாய்ச் சுட்டப்படும் உயிர்த் தொகுதியினை. 'அவனவளதுவெனும் அவை' என்றார் மெய் கண்டதேவரும்.

இவ்வதிகாரத்தின் முதற்குறள் உயிர்களது உண்மையும் அவை எண்ணில் என்பதும் உணர்த்துகின்றது.

இக்குறளின் ஈற்றிலுள்ள தொகை என்பதனைப் பிறந்த நாள் பிறக்கும்நாள், துறந்தோர், துறப்போர் என்னும் நான்கினோடும் கூட்டி, துறந்தோர் தொகை பிறந்தநாள் தொகை போலும் எனவும், துறப்போர் தொகை மேலும் பிறக்கும் நாள் தொகை போலும் எனவும் நிரனிறைப் பொருள் கொள்க. பிறந்தநாள்-உலகம் தோன்றியது முதற் கொண்டு இதுகாறும் உயிர்கள் பிறவியுட்பட்டுத் தோன்றிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/51&oldid=514443" இலிருந்து மீள்விக்கப்பட்டது