பக்கம்:திருவருட் பயன்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

      ‘ஐயத்தினீங்கித் தெளிந்தார்க்கு (திருக்குறள்-353)

என்பதனை எண்ணி 'ஐயம் இலது' எனவும்,

மலர்மிசை யேகினான் (திருக்குறள்-3) என்பதனை மனங் கொண்டு 'உணர்வாய் ஒவாது' எனவும், உமாபதிதேவ தம்பிரானார் இத்திருவருட்பயனை அமைத்த திறம் உணர்ந்து மகிழத்தக்கதாகும். இந்நூலின் முதலதிகாரத்துப்பத்தாங் குறளாகிய இது.

    'பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
     இறைவ னடி சேராதார்’ 

எனவரும் திருக்குறள் முதலதிகாரத்துப் பத்தாவது திருக்குறட் பொருளை நினைவுகூரும் முறையில், இறைவனடியை இடைவிடாது நினைவார்க்குப் பிறவியறுதல் உறுதி என நியமித்துப் பயன் கூறுவதாக அமைந்திருத்தல் கூர்ந்துணரத் தக்கதாகும்.

உ. உயிரவை நிலை

அஃதாவது, பலவாய உயிர்களது முறைமை. இதனைப் பன்மை வாசகப்படுத்திய அதனால் பதி ஒன்றே என்பது தானே கொண்டு கிடந்தது. பதியின் இயல்பு கூறிற்றாகலான், மேலை அதிகாரத்தினோடு இதற்கு இயைபுடைத்து எனக்கொள்க. பசு-உயிர்-சேதனன்-புற்கலன் சீவன்-அணு-வியாபகன்-ஆன்மா என்பன ஒருபொருட் கிளவி.

      11. பிறந்தநாள் மேலும் பிறக்குநாள் போலுந்
          துறந்தோர் துறப்போர் தொகை.

இ-ள்: உயிர்கள் தோற்றிய காலத்தினது தொகையும், மேற்றோற்றுங் காலத்தினது தொகையும், இறைவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/50&oldid=514442" இலிருந்து மீள்விக்கப்பட்டது