பக்கம்:திருவருட் பயன்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

நின்றமையின், இக் குறள்வெண்பா ஒட்டென்னும் அணி யமைந்ததாகும்.

ஒளியிலும் இருளிலும் சார்ந்து அதுவதுவாந் தன்மை யுடையது ஆன்மாவாயின், அஃது இதுகாறும் தோன்றாத் துணையாய் நிற்கும் ஒளிப்பொருளாகிய சிவத்தை அறிந்து அடையாதிருத்தல் எதனால்? என வினவிய மாணாக்கர்க்கு அவ்வாறு அறிந்து அடைய இயலாமைக்குத் தடையாக யுள்ளதனை அறிவுறுத்துவது, அடுத்துவரும் குறட்பாவாகும்.

         19. ஊமன்கண் போல ஒளியும் மிகவிருளே
             யாமன்கண் காணா தவை.

போ-ள்: உதயஞ் செய்து விளங்காகின்ற சூரியனைக் காணாத கூகையினது கண்போல, முற்கூறிய உயிர்களும், கருத்தாவாகிய சிவனுடைய ஞானத்தினைக் காணமாட்டா. அந்த ஞானமும் அந்தக் கூகையினது கண்ணுக்குச் சூரியன் சிறிதுந்தோன்றாது நின்றாற்போல உயிர்களுக்குத் தோன்றாது நின்றதாம் என்க.

உம்மை சிறப்பு. ஏகாரம் தேற்றம்

இதனால் உயிர்கள், தமக்கு உயிராகி விளங்கி நின்ற ஞானத்தினைக் காணாமைக்கு உவமனொடு படுத்திக் கூறப்பட்டது.

விளக்கம்: ஊமன் - கூகை, கோட்டான் என்னும் பறவை. இப்பறவைக்கு ஒளிமிக்க பகற்காலத்தில் கண் தெரியாது. "மன் கண் காணாத அவை(க்கு) ஊமன்கண் போல ஒளியும் மிக இருளேயாம்" என இயையும். 'காணாத' என்புழிப் பெயரெச்சத்து அகரமும், 'அவைக்கு' என்புழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/67&oldid=514492" இலிருந்து மீள்விக்கப்பட்டது