பக்கம்:திருவருட் பயன்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



67

என அருணந்தி சிவனாரும் கூறிய விளக்கங்களை அடியொற்றி இந்நூலாசிரியராகிய உமாபதி சிவனார் உலகு உடல் கருவி நுகர்பொருள்களாகிய மாயேயங்களுக்கு விளக்கினை உவமை கூறிய திறம் கூர்ந்துணரத் தக்கதாகும்.

இருளை நீக்குந் திறத்தில் துணையாய் நின்றுதவும் விளக்கு, காற்றால் அலைப்புண்டு தளரும் நிலையில், இருள் அவ் விளக்கினை மீதுார்தல் உண்டென்பது, ‘விளக்கற்றம் பார்க்கும் இருளே போல்’ (திருக்குறள்-1186) எனத் திருவள்ளுவர் காட்டிய உவமையால் உய்த்துணரப்படும். 'விளக்கு அனய' என்னாது, விடிவாம் அளவும் விளக்கு அனைய’ என விதந்து கூறியதனால் ஞாயிறு தோன்றிப் பொழுது புலர்ந்த நிலையில் விளக்குத் தன்னொளி மழுங்கியடங்குதல் போன்று, உயிர்கட்குச் சிவஞானம் பிரகாசித்த அளவில் இருவினைக் கீடான மாயேயங்களாகிய இவையும் பாசங்களென விலக்கப்பட்டு ஒளி மழுங்கி மறைவன என, ஒழிந்த மாயை கன்மங்களது இயல்பும் உடன் கூறியவாறு.

ச அருளதுநிலை

அஃதாவது, கருணையுருவாகிய ஞானத்தின் முறைமை. இத்தன்மையவாகிய அவிச்சையைத் துறந்து விட்டு நெறி காட்டுதற்பொருட்டு, அதற்கு (அவ்வவிச்சைக்கு) மாறாகிய அருளினது முறைமை கூறலின், மேலை அதிகாரத்தினோடு இதற்கு இயைபுண்மையறிக.

          31. அருளிற் பெரிய தகிலத்தில் வேண்டும்
              பொருளிற் றலையிலது போல்.

இ-ள் : ஒருவர்க்கு எல்லாப் பொருள்களுள்ளும் தாம் விரும்பிய பொருளின் மேலாய பொருள் இல்லாதவாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/90&oldid=515389" இலிருந்து மீள்விக்கப்பட்டது