பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

«Յ5Զ- P திருவருணேக் கலம்பகம்

னேசர் - அருணுசலேசு.ாாது, கைலாசமேல் - கைலாச மலையி னிடத்துள்ள, தாணங்கள் சிகர் தோளர் - தாண்களை யொத்த தோள்களையுடைய தலைவர், உறைகின்ற நகர் ஊடு - வீற்றிருக் கின்ற நகரக் கிளிடையே, மடவார் - பெண்களது, பூண் அம் கைவளை சிங், - கரிக்கப்பட்ட அழகிய கையின்கனுள்ள வளை யல் கழல, மனத்து எற புகைபோல - மனத்தின்கண் எழுகின்ற காமாக்கினியாற்ருேன்றிய புகையைப்போல, வேள் பானங் கள் உதிர்கின்ற - மன்மதனது பானங்களாகிய மலர்கள் சிந்து கின்ற, துகள்போல - துகளைப்போல, உறைகால் - துளியைச் சொரிகின்ற, பனிக்காலம் - பனிக்காலமானது, சொரியாது அரோ - நீர்த்துளியைச் சொரியாதோ?

தலைவி பனிக்காலத்தின் வருத்தநோக்கித் தலைவன் இருக்குமிடத்தில் இப்பனி சொரியாதோ என்றபடி.

கைலாச வரையிடத்துள்ள நகர் என்க. தானங்கள்-அம் சாரியை. அாோ ஐயப்பொருளில் வந்தது. சிந்த ஏறு மென்க. புகைபோல துகள்போல உறையைக் காலுகின்ற என்க. உதிர் கின்ற பனிக்கால மென்க. வளைசிதறல் - காமாக்கினியால் உடல் மெலிதலால். எ - ஈற்றசை. துகள் - நுண்பொடி. மட வார் - ஈண்டுத் தலைவனைப் பிரிந்த மகளிர். உதிர்கின்ற - -zyဝါဝ றிணைப் பலவின்பாற் படர்க்கை வினைமுற்று; அன்சாரியை குறைந்தது.

இது, முதற்சீர் தேமாங்காய்ச்சீரும், இரண்டு மூன்று நான்கு சீர்கள் பெரும்பாலும் புளிமாங்காய்ச்சீரும், இறுதிச்சீர் பெரும்பாலும் புளிமாங்கனிச்சீரும் பெற்றுவந்த விருத்தக் கலித்துறை. (சுச)

இருவிகற்பநேரிசைவெண்பா

பண்ணிறந்த வாசவரிற் பல்கோடி மாண்டாலு மெண்ணிறந்த வேத ரிறந்தாலுங்-கண்ணற்