பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

Аь і т. .ே பொருள் கி.அவியும், கலாசாலை மாணவர்க் , பயன்படுமா. சொல்முடிபு, பொருள்முடிபு, இலக் to or -ul மதி முதலிய விசேடணங்களை ஈந்தும், சில சொற் கருக்கும், பிரயோகங்களுக்கும், கருத்துக்களுக்கும், தேவாரம், திருவாசகம், திருக்கோவையார், சித்தியார், கந்தபுராணம், மணிமேகலை முதலிய பன்னூல்களி லிருந்து மேற்கோள் காட்டியும், செந்தமிழ் நூல் பலவற் றிற்குத் தந்துரைத்த பழைய உரையாசியர் பலரைத் கழுவி, ஐவகை இலக்கணமும் செவ்விதின் அமைய, நூலாசியர் பெருமை தோன்ற, எழுதிய இவ்வுரைநடைச் செல்வம் யாவரும் பெற்றுப் போற்றத் தக்கதொரு பெருஞ் செல்வமாகும். இந் நாலுட்கிடந்த புதைபொரு ளனைத்தையும் எளிதில் எடுத்துரைத்து ஆசிரியர் செய்த நன்றி என்றும் எங்நாட்டும் கின்று நிலவுக.

இத்தகைச் சிறப்பு வாய்ந்த இவ்வுரை நூலை அச்சிடக் கருதி யான் சீகாழி வித்துவசிகாமணி ப. அ. முத்துத் காண்டவராய பிள்ளை அவர்களிடமும், சீகாழி சபா நாயகமுதலியார் இந்து உயர்தரப்பள்ளிக்கூடத் தலை மைத்தமிழாசிரியர் திரு. மு. சண்முகதேசிகர் அவர்க ளிடமும் தெரிவித்துக் கொண்டபோது, அவர்கள் தங் கள் நேயர் சென்னை வித்துவான் காழி. சிவ. கண்னு சாமி பிள்ளை அவர்கள் B.A., மூலமாய்த் தக்க முயற்சி யெத்ெது அச்சிடுவிக்க இசைந்தார்கள். இம்மூவருக்கும் ம. கன் மனமார்ந்த வந்தனத்தைச் செலுத்துகிறேன்.

சிகாழி, }

2ስ : 2-!!)፡}4. த. சுந்தரேச ஆச்சாரியார்

தமிழாசிரியர், லூதரன்மிஷன் ஹைஸ்கூல், சீகாழி.