பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பு

காப்பு - காத்தல்; அது, இங்குக் காக்கின்ற கடவுளின்

விஷயமான வணக்கத்தைக் குறிக்கும்; ஆகவே

கவி தமக்கு ל

ای நேரிடத்தக்க இடையூறுகளை நீக்கித் தமது எண்ணத்தை நிறை வேற்றவல்ல தலைமைப்பொருளின் விஷயமாக உயர்ந்தோர்

வழக்கத்தின்படி செய்யுங் தோத்திரமென்பது கருத்து.

விநாயகக் கடவுள்

நேரிசைவெண்பா

அன்னவயல் குமுருனே யண்ணு மலையார்மேன் மன்னுங் கலம்பகப்பா மா லைக்குத்-துன்னியசீர் மெய்க்கோட்டு மேருவெனும் வெள்ளேட்டின் மீதெழுதுங் கைக்கோட்டு வாரணமே காப்பு.

அன்னம் வயல்சூழ் - அன்னப்பறவைகள் வசிக்கின்ற வயல் கள் சூழ்ந்த, அருணை - அருணகிரிப் பதியிலுள்ள, அண்ணுமலை யார்மேல் - அருளுசலேசுரர்மேல் (யான் பாடுகின்ற), மன்னும் - நிலைபேருயுள்ள, கலம்பகம் பாமாலைக்கு - கலம்பகமாகிய பாமாலைக்கு, துன்னிய சீர் - நெருங்கிய கீர்த்தியினையுடைய பாரதத்தை, மெய்கோடு மேருஎனும் - என்றும் உள்ளதாகிய சிகரங்களையுடைய மகாமேருமலை யென்கின்ற, வெள் ஏட்டின் மீது - எழுதப்பட்டில்லாத வெற்றேட்டின்மேல், எழுதும் - எழு திய, கைகோடு வாரணம் - கையின் கண் கொம்பினை புடைய யானைமுகக் கடவுள், காப்பு - பாதுகாவலாவார்.

இக்காப்புச் செய்யுள், வழிபடு கடவுள் வணக்கம் ஏற்

புடைக்கடவுள் வணக்கம் என்றவகை யிரண்டனுள் வழிபடு கட