பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

←ᎯᏳr ᎼᏂr திருவாகணேக் கலம்பகம்

வானே ராராய்கின்ற, சோணகிரிப்பதி - அருணகிரிப்பதியில், வாழ் நாராய் - வாழ்கின்ற நாரையே! மாகம் அடுத்த - ஆகா யத்தை யளாவிய, இள காவே - இளமாச் சோலேயே கோக னகத்து - தாமரை மலரில், இமிரும் தேனே - ஒலிக்கின்ற வண்டே மன்னவர் எண்ணம் - தலைவருடைய நினைப்புகள், விளங்கா - இன்னவென்று தெரியாவாம்; கொண்கரை விட்டும்நாயகரை நீங்கப்பெற்றும், இருந்தேன் - இறவாமல் உயிர் தரித் திருந்தேன். - =

தலைவி நாரைகளையும் சோலைகளையும் தடாகத்திலுள்ள தாமரை மலரில் வசிக்கின்ற வண்டுகளையும் பார்த்துத் தலைவன் பிரிந்தமை கூறிவருந்தல். -

நாகமெடுத்தவர்-கண்ணபிரான்; இனிச் சேடனகிய நாகத் தாம் ருங்கப்பெற்ற திருமால் எனினுமாம். தோகை - மயில்; உவமவாகு பெயர்; சாயலுக்குவம்ை. திருமால் அம்பு ஆதல், திரி புரதகன காலத்திலென்க. சேண் - இடவாகு பெயர்; சேனர் ஆய் எனினுமாம். ஆய்-ஆராய். ஆய்சோனகிரி வினைத்தொகை. வான ராய் வாழ்நாாாய்; ழகாங்கெட்டு நகரங் கிரிந்தது; இதை விதியின்பாற் படுத்துவர் வீாசோழியகாரர்; மரூஉவின்பாற் படுத்துவர் நன்னூலார். கொண்கர் - கொழுநர் என்பதன் மரூஉவுமாம். இச்செய்யுளில் மடக்கு என்னும் சொல்லணி காண்க.

இது, மூன்று ஆறுசீர்கள் தேமாங்காய்ச் சீரும், ஏனைய கூவி ளச்சீரும் பெற்றுவந்த அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்.

ஊசல் எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம் இருசாணச் சிலம்பாட வாடீ ரூச

லிளமுலைப்பொற் சிலம்பாட வாடீ ரூசன்