பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

O திருவருணேக் கலம்பகம் تکیہ

அயன் இருக்கவும் - பிரமன் உயிரோடிருக்கவும், அ ரி பிழைக்கவும் - கிருமால் உயிர்பிழைக்கவும், திருமிடறு ஒரு கருமை வைத்தவர் - அழகிய கண்டத்து ஒரு கரிய விடத்தைத் தரித்தவராகிய, அருணை வெற்பினர் - அருணகிரி யென்னும் மலையினையுடைய சிவபெருமானாது,கிருங் கி கயல் தேடி - கிரு நதியின்கண் மீனைத்தேடி, கருதும் - சிங்திக்கின்ற, நெடுஉடல் அசைவு அற துயில் - நீண்ட உடலானது அசைதலில்லாமல் து.ாங்குவதுபோல, கபடம் நித்திரை நாரைகாள் - வஞ்சகம் பொருங்கிய நித்திரையையுடைய நாரைகளே! இறைவர் பக்க லில் - தலைவரிடத்தில், இருகண்களும் - இரண்டு கண்களும், சித்திரை இலை என சொல ஏகும் - தாங்குதல் இல்லையென்று சொல்வதற்குச் செல்லுங்கள்.

அயன் திருமாலிடத்துத் தோன்றியவன் என்பது பொருள். ஆக வென்னு மிடைச்சொல் தான் சார்ந்துகின்ற சொல்லின் பொருண்மையை யுணர்த்திற்று. ஆகவே - ஏகாரம் பிரிநிலை.

திரு என்பது கண்டாரால் விரும்பப்படுத் தன்மை ;நோக்கம் என்றது அழகு. கிருககி அருளுசலத்திற்கு வடபக்கத்தி லுள்ள ஒரு நதி. உம்மைகள் - எண்ணும்மை. ஒரு - ஒப்பற்ற எனினுமாம். கருமை - பண்பாகு பெயர். துயில் - முதனிலைத் தொழிற்பெயர்: உவமவுருபு தொக்கது. மீனைப்பிடித்தற்கு அவ்வாறிருத்தல்பற்றிக் கபடகித் திரை யென்முர். கருதும் செய்யுமென் வாய்பாட்டுப் பெயரெச்சம். நாரைகாள் - விளி. இலை சொல என்பன தொகுத்தல்; சொல - செயவென்வாய் பாட்டு வினையெச்சம். நெட்டு நெடுமை யென்னும் பண்புப் பெயர் ஈறுபோய்த் தன்னெற்றிரட்டியது.

இது, ஒன்று மூன்று ஐந்து சீர்கள் புளிமாச்சீரும், இரண்டு நான்கு ஆறு ஏழு சீர்கள் கூட.விளச்சீரும் பெற்றுவந்த எழுசீர்க் கழி நெடிலாசிரிய விருத்தம். (~~)