பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

இக்கருத்துடைய திருவள்ளுவர் வாய்மொழி

'ஊழையும் உப்பக்கம் காண்பர்' (620)

என்பது. உப்பக்கம் காணும் வல்லமை கொண்ட இவர் யார்? அவர் ஆள்வினை உடையவர். ஆம், முயற்சி ஒன்று. மட்டும் கொண்டவர். அம்முயற்சி எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதையும் விவரித்துள்ளார்.

'வருந்தி உழைக்கும் முயற்சி

காலத்தாழ்ச்சியோ நெஞ்சுரத்தாழ்வோ இல்லாத முயற்சி

மன அயர்ச்சியோ உடல் அயர்ச்சியோ இல்லாத முயற்சி இத்தகைய ஆள்வினை உடையவரைத் திருவள்ளுவர்

உலைவின் றித் தாழாது உஞற்று பவர்'

என்றார். இவ்வாறு உஞற்றுபவர்' என்ன காண்பார்?

- "ஊழையும் உப்பக்கம் காண்பர்’

என்று முத்தாப்பு வைத்தார். இந்த ஆப்பு முத்து ஆப்பு

மட்டும் அன்று: வைர ஆப்பும் ஆகும். அத்துணை உறுதி கொண்ட கருத்தாகும்.

கருத்து வலிமைக்காகவும், இலக்கிய நயத்திற்காகவும் முன்னே கண்டவாறு கம்பரை மறுபடியும் இழுத்துப் பொருத்திப் பார்க்கலாம்.

'இராகவன்றன் புனித வாளி'

எவ்வெவ்வாறு இராவணனை வீழ்த்தியதாகக் கம்பர் பாடினார்? -