பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ. காணப்பட்ட பகுத்தறிவு முனைகளின் தொகுப்பு

உருவத்தைக் குறிக்கும் இலக்கியப் பெருவழக்குச் சொல்லான கடவுள்' என்பதை விடுத்து, 'இறைவன்’ என்னும் அருகிய இலக்கிய வழக்குச் சொல்லைத் தேர்ந்து கையாண்ட பகுத்தறிவுச் சான்று.

'பகவன்’ என்னும் சொல்லாக்கத்தால் கண்ட பகுத்தறிவாண்மை.

'இறை’, ‘இறைவன்' என்னும் சொற்கள் கடவுட் பொருட் குறிப்பில் தனித்தன்மையுடன் காட்டப்படாமல் மன்னவன், என்னும் பொரு ளுடன் சமமாக்கிய துலாக்கோல்.

தாமரைக் கண்ணனாம் திருமாலைப் பகடிக்குள் வைத்தும், அடியளந்தானாம் திருமாலை மடியிலா மன்னவனுக்கு அடுத்த நிலையில் வைத்தும் காட்டிய பொருட்காட்சி.

தாமரையினாளாம் திருமகளை மடியிலான் தாள் உள்ளே பொருத்திய தகவாக்கம்.